பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 July, 2019 6:27 PM IST

இந்தியாவில் பெரும்பாலான விவசாகிகள் தோட்டக்கலை துறையில் ஈடுபட்டுள்ளனர்.  அதிக வருமானம் ஈட்டும்  துறையாகவும் இருப்பதால்  அவர்களை ஊக்குவிக்கவும், எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகிறது. திட்டங்களை குறித்த முழு விவரங்களும் கிழே குறிப்பிடப் பட்டுள்ளன.

மத்திய அரசு செயல் படுத்தும் திட்டங்கள்

1.பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம்
2. தேசிய தோட்டக்கலை இயக்கம்
3. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்
4. மானவாரி பகுதி மேம்பாடு
5. பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்
6. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்
7. பிரதம மந்திரியி பயிர் காப்பீடு திட்டம்
8. தேசிய ஆயுஷ் இயக்கம் - மருத்துவ பயிர்கள்

திட்டத்தில் இணைவதற்கான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை நகல்
  • குடும்ப அட்டை நகல்
  • சிறு/ குறு விவசாகிகள் சான்றிதழ்
  • புகைப்படம்
  • நிலம் தொடர்பான ஆவணங்கள்

திட்டம் தொடர்பான தகவல்களை தர வல்லவர்

  • தோட்டக்கலை அலுவலர்
  • தோட்டக்கலை உதவி அலுவலர்
  • தோட்டக்கலை உதவி இயக்குனர்

பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம்

தோட்டக்கலைப் பயிர்களுக்கு தேவையான சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன கருவிகளை அமைப்பதற்கு மானியம் வழங்குகிறது.

  • சிறு/குறு விவசாகிகளுக்கு - 100%
  • இதர விவசாகிகளுக்கு - 75%

திட்ட மானியம்
ஒரு விவாசகிக்கு - 5 எக்டர்

தேசிய தோட்டக்கலை இயக்கம்

  1. உயர்தர நடவு செடிகள் உற்பத்தி - நாற்றங்கால் அமைத்தல் 40% - 50% மானியம்
  2. பரப்பு விரிவாக்கம் - 40% மானியம்
  3. காளான் உற்பத்தி - 40% மானியம்
  4. பழைய தோட்டங்களை புதுப்பித்தல் - 50% மானியம்
  5. நீர் ஆதாரங்களை உருவாக்குதல் - 50% -100% மானியம்
  6. பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி - 50% மானியம்
  7. ஒருங்கிணைந்த உர மேலாண்மை - 30% மானியம்
  8. தேனீ வளர்ப்பு - 40% மானியம்
  9. இயந்திரமயமாக்கல் - 25% - 40% மானியம்
  10. அறுவடைக்கு பின் செய்யும் மேலாண்மை - 35% - 50% மானியம்
  11. சந்தை உட்கட்டமைப்பு வசதி - 35% மானியம்
  12. பண்ணை குறைகளை நிவர்த்தி செய்தல் - 50% மானியம்

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்

  • வாழைத்தார் உறை உருவாக்குதல்
  • தோட்டக்கலை பயிர்களுக்கு புத்துயிர் ஊட்டுதல்
  • வெங்காய அபிவிருத்தி திட்டம்
  • சூழல் அடிப்படையிலான பூச்சி மேலாண்மை திட்டம்
  • அறுவடைக்கான அலுமினிய ஏணிகள்
  • பிளாஸ்டிக் கூடைகள்
  • நடவு பொருட்கள் வழங்குதல்
  • மூலிகை தோட்டத்தளைகள்
  • காய்கறி தோட்டத்தளைகள்
  • பசுமைக் குடில்
  • நிழல் வலைக்குடில்

மானவாரி பகுதி மேம்பாடு

தோட்டக்கலை சார்ந்த பண்ணையம்

  • பசுமைக்குடில்
  • மண்புழு உரம் உற்பத்தி
  • சேமிப்பு கிடங்கு மற்றும் மதிப்பு கூட்டுதல்
  • ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் விவசாகிகளுக்கு பயிற்சி
  • செயல்விளக்கம்

பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த திட்டத்தில் பல்வேறு சலுகைகளை அரசு செய்து வருகிறது.

  • 50 ஏக்கர் கொண்ட இயற்கை வேளாண்மை குழுக்களுக்கு பங்கேற்பு உத்திரவாத சான்றிதழ் வழங்குதல்
  • இயற்கை வேளாண்மைக்கான சான்றிதழ் மற்றும் தர கட்டுப்பாடு
  • ஒருங்கிணைந்த உர மேலாண்மை
  • வேளாண் கருவிகள் வாடகை மையம்
  • சிப்பம் கட்டுதல், வர்த்தகம் செய்தல 

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்

  • காஞ்சிபுரம், கரூர், திருவள்ளுர், தூத்துக்குடி, விருதுநகர், நாமக்கல், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் இந்த திட்டமானது செயல் பட்டு வருகிறது.
  • நடவு செடி மற்றும் வீரிய ஒட்டு ரக காய்கறி விதைகள் - 40%  மானியம்

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம்

காப்பீடு வழங்கப்படும் பயிர்கள்

  • வாழை
  • மரவள்ளி
  • மஞ்சள்
  • வெங்காயம்
  • உருளை கிழங்கு
  • மிளகாய்

நிவாரணம் வழங்கப்படும் நிலைகள்

  • விதைப்பு/ நடவு செய்ய இயலாமை
  • விதைப்பு செய்து முளைப்பு பாதித்தல்
  • இடைக்கால பருவ இடர்பாடுகள்
  • அறுவடைக்கு பின் ஏற்படும் பாதிப்புகள்
  • பகுதி சார்த்த இடர்பாடுகள்
  • மகசூல் இழப்பு மற்றும் பாதிப்பு

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: You Are Not Aware Of Central Government Schemes? Here Is A Guideline For Farmers
Published on: 29 July 2019, 06:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now