இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளில் ஒன்று PF கணக்கிலிருந்து இருந்து பணத்தை எவ்வாறு பெறுவது (how to withdraw PF money?). கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயிலிருந்து இத்தகைய தேடலின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை திரும்பப் பெறுவது குறித்தும் உங்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால், அதை இப்போது அகற்றவும்.
ஏனெனில், PF-ல் இருந்து பணத்தை எடுக்க, நீங்கள் எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை, நீங்கள் ஒருவரின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை. இந்த வேலையை உங்கள் மொபைலில் இருந்து 2 நிமிடங்களில் செய்யலாம். இதற்கு உங்களுக்கு தேவையானது ஸ்மார்ட்போன் மற்றும் இணைய இணைப்பு மட்டுமே. PF பணத்தை திரும்பப் பெற இரண்டு வழிகள் இருந்தாலும், உமாங் செயலியைப் (UMANG app) மூலம் இதை எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கே நாங்கள் உங்களுக்குச் சொல்லப்போகிறோம்.
> முதலில், உங்கள் மொபைலில் UMANG செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அனைத்து EPFO (Employees’ Provident Fund Organisation) உறுப்பினர்களும் இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.
> நீங்கள் செயலியை திறந்து EPFO-யை தேடுங்கள்.
> அதில், 'Employee Centric' என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்க.
> பின்னர்‘Raise Claim’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
> இதற்குப் பிறகு, உங்கள் EPF UAN எண்ணை உள்ளிடவும், உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் நிறுவனத்திடமிருந்து UAN எண்ணைக் கேளுங்கள்.
நீங்கள் UAN எண்ணை உள்ளிட்டவுடன் OTP உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும், அதை உள்ளிடவும்.
> அதன் பிறகு withdrawal Type-யை தேர்ந்தெடுத்து தொகையை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
> நீங்கள் உரிமைகோரல் குறிப்பு எண்ணை (CRN) பெறுவீர்கள், அதை நீங்கள் குறித்து வைத்திருக்க வேண்டும்.
> CRN இன் உதவியுடன், உங்கள் உரிமைகோரலின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.
> உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் 10 வேலை நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
PF பணத்தை எடுப்பதற்கு முன் கவனம்....
PF-ல் இருந்து பணத்தை எடுக்க, உங்கள் KYC முடிக்கப்பட வேண்டும், இல்லையென்றால் முதலில் அதை முடிக்க வேண்டும். UAN எண்ணை ஆதார் உடன் இணைக்கவும், UMANG பயன்பாடு ஆதார் உடன் இணைக்கப்பட வேண்டும். UMANG பயன்பாடு பல சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உதாரணமாக, வருமான வரி தாக்கல், எரிவாயு சிலிண்டர் முன்பதிவு, பாஸ்போர்ட் சேவை, PM அவாஸ் யோஜனா, பான் கார்டு போன்றவை உள்ளன.
மேலும் படிக்க
UAN நம்பர் இல்லாமல் PF கணக்கின் இருப்பு தொகையை சுலபமாக அறிந்து கொள்ளலாம்..!