News

Sunday, 10 April 2022 12:46 PM , by: Elavarse Sivakumar

நாட்டில் உள்ள அனைத்து ஏடிஎம்-களிலும் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மூன்று நாள் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவித்தார்.

இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்.-களிலும் யுபிஐ ஐடி மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளதாக சக்திகாந்த தாஸ் கூறினார்.

ஏடிஎம்-களில் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது குறித்து சக்திகாந்த தாஸ் தெரிவித்ததாவது:-

தற்போது ஏ.டி.எம்.-கள் மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி சில வங்கிகளில் மட்டுமே உள்ளது. யு.பி.ஐ- ஐடியைப் பயன்படுத்தி அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்குகள் முழுவதும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வழங்க இப்போது முன்மொழியப்பட்டுள்ளது. இதன்மூலம், பண பரிவர்த்தனைகளை எளிதாக்க வழி பிறந்துள்ளது. மேலும், கார்டு ஸ்கிம்மிங், கார்டு குளோனிங் போன்ற மோசடிகளைத் தடுக்க உதவும்.

கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியால், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் போது, ​​வங்கி வாடிக்கையாளர் தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த அமைப்பு தற்போது பல்வேறு வங்கிகளில் உள்ளது. கோவிட்-19 பரவல் தொடங்கியதை அடுத்து பலர் ஏடிஎம்களுக்கு செல்ல தயங்கியபோது இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

பரோடா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் கார்டுதாரர்கள், டெபிட் கார்டு இல்லாமலும், தங்கள் தொலைபேசி மூலம் பணத்தை எடுக்கலாம்.
கார்டு வைத்திருப்பவர் பெரும்பாலும் மொபைல் பேங்கிங் செயலியைப் பயன்படுத்த வேண்டும்.

டெபிட் கார்டுகளை வைத்திருக்கவில்லை என்றால், ஏடிஎம்களில் பணத்தை எடுக்க கோரிக்கை செய்ய வேண்டும்.இதில், தினசரி பரிவர்த்தனை வரம்பு உள்ளது. குறிப்பிட்ட வங்கி வழங்கும் வசதிகளின்படி இது ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை வரம்பு உள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த முறை ஏடிஎம் மோசடிகளைத் தடுக்கும். ஏனெனில் இது பணத்தை உருவாக்க மொபைல் பின்னைப் பயன்படுத்துகிறது. கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறை யுபிஐ வசதியைப் பயன்படுத்துகிறது. இது உடனடிப் பணப் பரிமாற்றம் மூலம் பணம் அனுப்புபவரால் இந்த சேவை செயல்படுகிறது. இது பயனாளியின் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி பணத்தை மாற்ற அனுமதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)