News

Monday, 31 August 2020 05:51 AM , by: Daisy Rose Mary

Kisan Credit card Loan: கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்ற விவசாயிகள் தங்களின் கடன் தொகையை இன்றைக்குள் செலுத்திவிட வேண்டும் இல்லையெனில், கடனுக்கான 3 சதவீத வட்டி தள்ளுபடியைப் பெற முடியாது.

கிசான் கிரெடிட் கார்டு கடன்

கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit card) மூலம் விவசாயிகள் குறைந்த வட்டியில் விவசாயம் சார்ந்த தேவைகளுக்குக் கடன் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடன் பெற எந்தவித அடமானமும் தேவையில்லை. மேலும் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடனை குறைந்த வட்டியில் பெற முடியும். குறுகியகால கடன் தவணையை முறையாகச் செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணத்தால் பெரும்பாலான விவசாயிகள் வங்கிகளில் வங்கிய கடன் தொகையைத் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முதலில் மே மாதம் வரை தனது கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் இந்த கால அவகாசத்தை மேலும் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடனுக்கான அசல் மற்றும் 4 சதவீத வட்டியை இன்றைக்குள் செலுத்தவேண்டும் இல்லை என்றால் 3 சதவீத கடன் தள்ளுபடியை விவசாயிகள் பெறமுடியாது

 


கடனை செலுத்தாவிட்டால் என்ன ஆகும்?

கிசான் கிரெடிட் கார்டு மூலம் பெறப்படும் கடன்களுக்கு முறையாக 9 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது. இதில் 2 சதவீதம் மத்திய அரசு மானியமாக வழங்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடியும் செய்யப்படுகிறது.

விவசாயி இன்றைக்குள் கிசான் கார்டு மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் 3 சதவீத வட்டி தள்ளுபடியை விவசாயிகள் பெறமுடியாது.

மேலும் படிக்க..

கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,02,065 கோடி சலுகை கடன்- மத்திய அரசு!!

விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)