இயற்கை விவசாயம் போல இயற்கை கால்நடை வளர்ப்பும் பல நன்மைகள் தரக்கூடிய ஒன்று. அதிலும் குறிப்பாக நாட்டினங்கள் என்று சொல்லப்படும் பாரம்பரிய இனங்கள் தரும் நன்மைகள் குறிப்பிடத்தக்கவை. ஆனால் இன்று பலருக்கு, நாட்டினங்கள் பற்றிய அருமை புரிவதில்லை. பலர் லாபங்களுக்காக ஜெர்சி, கிர் போன்ற வெளிநாட்டு இனங்களை வளர்க்கின்றனர்.
இதனால் நாட்டினங்கள் அழியத் தொடங்கிவிட்டன. தற்போது நாட்டினங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் சூழலில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நாட்டினங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் சிலர்.
பாரம்பரிய இனங்கள்
நாட்டு ஆடு, மாடுகள் குறித்து அறிய அவர்களின் கூட்டுப் பண்ணைக்கு சென்றிருந்த போது காங்கேயம் போன்ற நாட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர் என்பது தெரியவந்தது. இவை தவிர வெள்ளாடு, கன்னி போன்ற ஆடுகளும், நாட்டு வாத்து, மணி வாத்து, பாரம்பரிய குதிரைகள் போன்றவைகளையும் வளர்த்து வருகின்றனர்.
இவையனைத்திற்கும் தீவன பயிர்களை இயற்கை முறையில் இவர்களே வளர்த்து வருகின்றனர். இது தவிர இந்த கால்நடைகளை மேய்ச்சலுக்கும் எடுத்து செல்கின்றனர். இதனால் தீவன பயிர்களின் தேவையை குறைத்து, நடைபயணமாக மேய்ச்சலுக்கு சென்று வருவதால், கால்நடைகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்கின்றனர்.
நாட்டினங்களை பாதுகாக்க வேண்டும்
இதுகுறித்து பேசிய முனீஸ்வரன், ‘இந்த கூட்டுப்பண்ணையில் எங்களுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை. நாங்கள் அனைவரும் வருமானத்திற்காக வெவ்வேறு தொழில்கள் செய்து வருகிறோம். நாட்டு இனங்கள் அழிந்து வருகிறது. அவற்றை பாதுகாக்க எங்களால் இயன்றதை செய்து வருகிறோம். எங்களிடம் சரியான கூடாரம் இல்லை. இதனால் மழைக்காலத்தில் குதிரைகள் மற்றும் மாடுகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றன. இதற்கு அரசாங்கம் எதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.
மேலும் படிக்க: