இந்தியா முழுவதிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட 108 பள்ளி மாணவர்கள் இஸ்ரோ தலைவர் கே. சிவன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இந்த நிகழ்ச்சி ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் இளம் விஞ்ஞானிகளை (பள்ளி மாணவர்களை) அவர்களின் கல்வி அறிவு, அறிவியல் சார்த்த பார்வை ஆகியனவற்றின் அடிப்படையில் தேர்தெடுக்க படுவார்கள். நாடு முழுவதிலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இதற்காக விண்ணப்பத்திருந்தனர். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், யூனியன் பிரதேசத்திலிருந்தும் தலா 3 மாணவர்கள் வீதம் 108 மாணவர்களுக்கு பயிற்சிக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்திருந்தது.
இந்த திட்டத்திற்கு தேர்வான மாணவர்களுக்கு இஸ்ரோவின் நான்கு மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம், அகமதாபாதில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையம், மற்றும் ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் ஆகியவற்றில் தேர்வான மாணவர்கள் பயிற்சி பெறவுள்ளனர்.
இஸ்ரோ தலைவர் Dr. சிவன் அவர்கள் நேற்று மாணவர்களிடம் கலந்துரையாடினர். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததுடன் விண்வெளி ஆராய்ச்சி, அதன் செயல்பாடுகள் மற்றும் அடுத்து செலுத்த இருக்கும் ஏவுகணைகள் குறித்து விளக்கப்பட்டன.
செயல் படுத்தவிருக்கும் திட்டங்கள்:
இஸ்ரோ விண்வெளி மையம் பின்வரும் திட்டங்களை செயல் படுத்த உள்ளது,
- 2020 ஆம் ஆண்டு 'மிஷன் ஆதித்யா' திட்டமானது செயல் பட உள்ளது. இதில் சூரியனின் வெளி பரப்பை ஆராய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். அதன்படி 'ஆதித்யா எல் - 1' என்ற விண்கலம், 2020ல், விண்ணில் ஏவப்படும். புவியில் இருந்து, 15 லட்சம் கி.மீ.,யில் சூரியன் உள்ளது.அதில், ஆதித்யா விண்கலத்தை, 1.50 லட்சம் கி.மீ.,யில், நிலை நிறுத்தி, சூரியனின் வெளிப் பகுதி ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என்றார்.
- நிலவினை ஆய்வு செய்யும் மங்கள்யான் 2 திட்டமனது 2022ம் ஆண்டு செயல்படுத்த உள்ளது என்றார்.
- வீனஸ் கிரகத்திற்கு 2023ம் ஆண்டு ராக்கெட் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
- செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் இருப்பதாலும், பூமியில் இருப்பதை போன்று அங்கும் நீர் மற்றும் நில அமைப்புகள் இருப்பதினால் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது என்றார்.
- தகவல் தொழில் நுட்பத்திற்கு உதவ கூடிய பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் - ஆர்.எஸ்.ஆர் 2-பி என்கிற ராக்கெட் உதவியுடன் விண்ணில் செயற்கை கோள்களை நிலை நிறுத்த போவதாகவும் அவர் கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளில் சூரியன், சந்திரன், வீனஸ், செவ்வாய் உள்ளிட்ட ஏழு கிரகங்கள் தொடர்பான ஆய்வுகள் நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.