Others

Saturday, 17 September 2022 02:25 PM , by: Poonguzhali R

10,000 New Job Opportunities! Signed by M.K. Stalin!!

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” எனும் தலைப்பிலான மதுரை மண்டல மாநாடு, மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் 10,000 பேருக்கு புதிய வேலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்குக் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!

முதல்வர் தொடங்கி வைத்த திட்டங்களின் பட்டியல்

  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காகப் புதிய திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன.
  • சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனங்களுக்கும், அந்நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
  • தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறுவதைப் பதிவு செய்வதற்குச் சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லாமல் வங்கிகளில் இருந்தே ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யும் வசதி துவக்கி வைக்கப்பட்டது.
  • மதுரை விளாச்சேரியில் ரூ.4.03 கோடி மதிப்பில் பொம்மை குழுமம், தூத்துக்குடியில் 100% மானியத்துடன் ரூ.2.02 கோடி மதிப்பில் ஆகாயத் தாமரை குழுமம், விருதுநகரில் ரூ.3.40 கோடி மதிப்பில் மகளிர் விசைத்தறி குழுமம் ஆகிய 3 குழுமங்கள் அமைப்பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர்! இன்றே அப்ளை செய்யுங்க.!

சிட்கோ தொழில்பேட்டையில் இருக்கும் சிறு குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கான ஆன்லைன் வசதி துவக்கி வைக்கப்பட்டது.
பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்" எனும் புதிய திட்டம் மற்றும் அதன் இளச்சினை வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க: ஆவின் பொருட்கள் இன்றுமுதல் கிடுகிடு உயர்வு!

வங்கிகளில் கடன் பெறமுடியாமல் இருக்கும் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் CARE - தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டம் என்கிற புதிய திட்டம் துவங்கப்பட்டதோடு, முதல் பயனாளிக்கு ரூ.8.80 லட்சம் ரூபாய்க்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: TNPSC: கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தொழில் நுட்பத்திற்கு (Industry 4.0) குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் தயார் படுத்திக் கொள்வதற்குப் பயிற்சி வழங்கும்பொருட்டு இண்டோ அமெரிக்கன் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசின் Fame TN நிறுவனம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் வாயிலாகப் பல புதிய வேலைவாய்ப்புகள் தமிழகத்திற்குக் கிடைக்க உள்ளன எனக் கூறப்படுகின்றன.

மேலும் படிக்க

இரட்டிப்பு லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை!

UPSC: IAS படிக்க இலவச வகுப்புகள்! இன்றே சேருங்க!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)