Others

Tuesday, 06 December 2022 10:44 AM , by: Elavarse Sivakumar

பணத்தை சம்பாதிக்க இங்கு யாருக்குதான் ஆசை இல்லை. வருடம் முழுவதும் சம்பாதித்தாலும், நாம் நினைக்கும் இலக்கை எட்டுவது அவ்வளவு எளிதல்ல. அதிலும், நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், எவ்வளவு பணத்தை சேமிக்கிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில், உங்கள் கையில் உள்ள ஒரு காசு கூட உங்களை கோடீஸ்வரர் ஆக்கலாம். அதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ஏன் நீங்கள்கூட அந்த அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம்?

தேவை


இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பழைய பொருட்களுக்கு எப்போதுமே ஒரு தேவை உள்ளது, குறிப்பாக வெளிநாட்டில் பழைய பொருட்களை ஏலம் விட்டு பல கோடி ரூபாயம் சம்பாதிக்கின்றனர். உதாரணமாகச் சில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் நாட்டின் பழமையான மதுபான நிறுவனத்தின் ஒரு பாட்டில் சரக்கு பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படும் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

பழைய நாணயங்கள்

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது பழைய நாணயங்களுக்கான டிமாண்ட், வர்த்தகம் ஆகியவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் இணையத்தில் பல லட் ரூபாய்க்கு, சில நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமாகத் தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
5 ரூபாய் நோட்டு உதாரணமாக உங்களிடம் பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால் அதைப் புகைப்படம் எடுத்து ஈகாமர்ஸ் தளத்தில் அப்லோடு செய்தாலே போதும், விருப்பப்படுவோர் அதற்கான தொகையைக் கொடுத்துவிட்டு வாங்கிச் செல்வார்கள். இதற்காக நீங்கள் தனியாக எவ்விதமான நிறுவனத்தையோ முதலீடு செய்யவோ தேவையில்லை.

ஒரு ரூபாய் 

அப்படி இந்தியாவில் தற்போது பழைய ஒரு ரூபாய் நாணயம் தற்போது பெரிய அளவில் டிரெண்டாகியுள்ளது. உங்கள் வீட்டில் தாத்தா பாட்டியின் பெட்டியில், பீரோவில், அல்லது பரன் மீது இருக்கும் ஏதேனும் ஒரு பாத்திரத்தில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயம் உங்களுக்குப் பல கோடி ரூபாயை சம்பாதித்துக் கொடுக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

ரூ.10 கோடி

1885 ஒரு ரூபாய் நாணயம் சமீபத்தில் 1885 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் சமீபத்தில் 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எப்படி விற்பனை செய்வது இதேபோன்ற நாணயம் உங்களிடம் இருந்தால் நீங்களும் பல கோடி ரூபாய் பெறும் வாய்ப்பை பெறலாம்.

விற்பனை

இத்தகைய விற்பனையை நீங்கள் http://www.indiamart.com/"www.indiamart.com தளத்தில் செய்ய முடியும், இத்தளத்தில் ஒரு கணக்கை திறந்து உங்களிடம் இருக்கும் நாணயத்தைப் புகைப்படம் எடுத்து, அப்லோடு செய்தால் போதும். இந்தியாமார்ட் தளமே உங்களுடைய பொருளை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்யும். இந்தப் பணியில் விருப்பப்படுவோர் உங்களின் நாணயத்திற்கு விலையைக் கோருவார், விருப்பம் இருப்பின் தொகையைக் கொடுத்துவிட்டு நாணயத்தை விற்பனை செய்யலாம்.

மேலும் படிக்க...

இந்த எருமையின் விலை ரூ.35 கோடி- பாதாம், பிஸ்தாதான் உணவு!

100% மானியத்தில் உளுந்து சாகுபடி!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)