நேற்றைய தினம் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்த நிலையில், இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 23.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.08.2023 முதல் 27.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.08.2023 மற்றும் 29.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்);
சிவகாசி (விருதுநகர்) 12, திருத்தணி PTO (திருவள்ளூர்) 10, அரக்கோணம் (இராணிப்பேட்டை) ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்) தலா 9, மாயனூர் (கரூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), திருத்தணி (திருவள்ளூர்) நத்தம் (திண்டுக்கல்) தலா 8 விருதுநகர், சென்னை விமான நிலையம், ஆலந்தூர் (சென்னை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ஆண்டிப்பட்டி (மதுரை) வாடிப்பட்டி (மதுரை) தலா 7.
உசிலம்பட்டி (மதுரை), சத்தியார் (மதுரை), கொரட்டூர் (திருவள்ளூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை) காரைக்கால், பேரையூர் (மதுரை) வாலாஜா (இராணிப்பேட்டை), மீனம்பாக்கம் ISRO (சென்னை) தலா 6. குப்பணம்பட்டி (மதுரை) அம்மூர் (இராணிப்பேட்டை) புழல் ARG (திருவள்ளூர்), மின்னல் (இராணிப்பேட்டை). இராணிப்பேட்டை பொன்னை அணை (வேலூர்) தலா 5, கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை). பஞ்சப்பட்டி (கரூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை), காரியாபட்டி (விருதுநகர்), திருவாலங்காடு (திருவள்ளூர்) சிவகங்கை, கோவிலங்குளம் (விருதுநகர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) புள்ளம்பாடி (திருச்சி) தலர 4 cm மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை; ஏதுமில்லை.
மேலும் வானிலை தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள mausam.imd.gov.in/chennai என்கிற இணையதளத்தை காணவும் என தென் மண்டல வானிலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
நிலவில் தரையிறங்கும் சந்திராயன் 3- நேரலையில் பார்ப்பது எப்படி?
25 லட்சத்துக்கு கொப்பரையை விற்ற விவசாயிகள்- இன்றைய வேளாண் ஹைலைட்ஸ்