1. விவசாய தகவல்கள்

25 லட்சத்துக்கு கொப்பரையை விற்ற விவசாயிகள்- இன்றைய வேளாண் ஹைலைட்ஸ்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Today's Tamilnadu Agriculture Highlights on uzhavan app

தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவன் செயலியில் இணைந்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. அரசின் மானியத்திட்டங்கள், தங்கள் பகுதி வேளாண் விளைப்பொருள் ஏல அறிவிப்புகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களும் இச்செயலியில் உள்ளன.

உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட சந்தை விலை நிலவரம்:

மதுரை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் விளைபொருட்களுக்கான இன்றைய(23.08.2023) சந்தை விலை நிலவரம்(குவிண்டாலுக்கு) - நெல் - அட்சயா - குறைந்தபட்ச விலை ரூபாய் 2400, அதிகபட்ச விலை ரூபாய் 2500. நெல் – RNR - BB - குறைந்தபட்ச விலை ரூபாய் 2350, அதிகபட்ச விலை ரூபாய் 2400. பருத்தி குறைந்தபட்ச விலை ரூபாய் 5400, அதிகபட்ச விலை ரூபாய் 5500. சோளம் (சிவப்பு) குறைந்தபட்ச விலை ரூபாய் 4200, அதிகபட்ச விலை ரூபாய் 4800.

குதிரைவாலி குறைந்தபட்ச விலை ரூபாய் 3500, அதிகபட்ச விலை ரூபாய் 3700. வரகு குறைந்தபட்ச விலை ரூபாய் 3400, அதிகபட்ச விலை ரூபாய் 3500 . மக்கா சோளம் குறைந்தபட்ச விலை ரூபாய் 2200, அதிகபட்ச விலை ரூபாய் 2300. இருங்கு சோளம் குறைந்தபட்ச விலை ரூபாய் 3800, அதிகபட்ச விலை ரூபாய் 3900. கம்பு குறைந்தபட்ச விலை ரூபாய் 2600, அதிகபட்ச விலை ரூபாய் 2700 .

மிளகாய் வத்தல் குறைந்தபட்ச விலை ரூபாய் 12000, அதிகபட்ச விலை ரூபாய் 15000. கூடுதல் விபரங்களுக்கு மேற்பார்வையாளர், உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அவர்களை 04552-251070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தேங்காய் கொப்பரை கொள்முதல்:

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் அரவைக் கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூபாய் 108.60 என்ற விலையில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை கொள்முதல் செய்திடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 விவசாயிகள் தங்களது விளைபொருளான 235 குவிண்டால் அளவுள்ள தேங்காய் அரவை கொப்பரையை பிஎஸ்எஸ் விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கிலோ ஒன்றிற்கு ரூபாய் 108.60 வீதம் மொத்த மதிப்பு ரூபாய் 25,52,100-க்கு விற்று பயனடைந்துள்ளனர்.

தற்போது சந்தை மதிப்பில் தேங்காய் அரவைக் கொப்பரை ஒரு கிலோவிற்கு 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் விற்பதால் ஒரு கிலோவிற்கு ரூபாய் 29 வீதம் லாபம் கிடைக்கப்பெறுகிறது. இதேபோல் அனைத்து விவசாயிகளும் தங்களது விளைபொருளான அரவைக் கொப்பரையை மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின்கீழ் லாபகரமான விலைக்கு விற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என செயலாளர் (ராமநாதபுரம் விற்பனைக்குழு) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய்ப்பருப்பு மறைமுக ஏலம்:

சேலம் விற்பனைக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப்பருப்பு மறைமுக ஏலம்  இன்று நடைபெறுகிறது. எனவே, மேச்சேரி சுற்று வட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மறைமுக ஏலத்தில் கலந்துகொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெற அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என முதுநிலை செயலாளர் (வேளாண்மை துணை இயக்குநர், சேலம் விற்பனைக்குழு, சேலம்) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி தெளிவுப்பெறுமாறு விவசாயிகளுக்கு வேண்டுக்கோள் வைக்கப்படுகிறது.

மேலும் காண்க:

திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய்- முதல்வர் அதிரடி உத்தரவு

கர்ப்பக் காலத்தில் பேரீச்சம் பழம்- பக்கவிளைவும் இருக்குதா?

English Summary: Today's Tamilnadu Agriculture Highlights on uzhavan app Published on: 23 August 2023, 01:29 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.