1 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 80 ஆயிரத்து 800 ஓய்வூதியதாரர்களுக்கு, புத்தாண்டுப் பரிசாக அகவிலைப்படியை 12 சதவீதம் உயர்த்தி இந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புத்தாண்டு
இன்னும் ஓரிரு தினங்களில் 2022ம் ஆண்டு நம்மிடம் இருந்து விடைபெற்றுச் செல்கிறது. 2023ம் ஆண்டைப் புத்தாண்டாக வரவேற்க நாம் தயாராக இருக்கிறோம்.
இன்ப அதிர்ச்சி
இந்நிலையில், தங்களது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டு பரிசை அறிவித்து, இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறது திரிபுரா மாநில அரசு. இதன்மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 80 ஆயிரத்து 800 ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என அறிவித்துள்ளார் திரிபுரா மாநில முதலமைச்சர் மானிக் சஹா.
தேர்தல்
முன்னதாக வடகிழக்கு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, டிஏ எனப்படும் அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தியது அரசு. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
ஆசிரியர்களுக்கும்
இதன்மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு நிதியுதவி பெறாத தனியார் உயர்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்களும் இந்த அகவிலைப்படியைப் பெறத் தகுதி பெறுகிறார்கள்.
அமைச்சரவைக் கூட்டம்
செவ்வாய்கிழமை நடைபெற்ற திரிபுரா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்களையும், ஓய்வூதியதாரர்களையும், ஆசிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க…
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!