மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 December, 2022 11:47 AM IST

மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் 2 லட்சம் வரவிருக்கிறது. 18 மாதம் நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகை விரைவில் உங்களை வந்துசேரப் போகிறது. எனவே மத்திய அரசு ஊழியர்கள் இப்போதே அதற்கான செலவைத் திட்டமிடலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு, 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தும் தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 மாதங்களாக முடங்கிக் கிடக்கும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து இம்முறை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அமைச்சரவை செயலாளருடனான பேச்சுவார்த்தைக்கான நேரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த முறை அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கையுடன் உள்ளனர்.

நிலுவைத்தொகை

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து தொடர்ந்து கோக்கை விடுத்து வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசின் ஊதியக்குழுவின் பரிந்துரையின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகையை வழங்கினால், ஊழியர்களின் கணக்கில் பெரும் தொகை வந்து சேரும்.

எவ்வளவு கிடைக்கும்?

இப்போது ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் வரும் என்பதைப் பற்றி பேசலாம். ஜேசிஎம் (பணியாளர்கள் தரப்பு) தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ரா கருத்துப்படி, வெவ்வேறு ஊழியர்களுக்கு வெவ்வேறு நிலுவைத் தொகை உள்ளது.

லெவல்-1 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும். அதே சமயம் லெவல்-13க்கு (7வது சிபிசி அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ.2,15,900 அல்லது லெவல்-14 (ஊதிய அளவு) ஒரு ஊழியரின் டிஏ நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை வழங்கப்படும்.

கொரோனா காலத்திற்குப் பிறகு, மத்திய அரசு 2020 ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்தியது. ஆனால் அந்த காலகட்டத்தில் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை இன்னும் கிடைக்கவில்லை.

38 சதவீதமாக

ஆனால், மறுபுறம், ஊழியர்கள் அமைப்புகளின் கோரிக்கைகளால், அரசாங்கத்துக்கு அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் விரைவில் இது குறித்து முடிவெடுக்கும் என்று ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அரசு ஊழியர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதுபோன்ற சூழலில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவதற்கான ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபடவிருக்கிறது.

மேலும் படிக்க...

காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மத்திய அரசு வழங்கும் ரூ.10,000-Check செய்வது எப்படி?

English Summary: 2 lakhs in the bank account of central government employees!
Published on: 01 December 2022, 11:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now