மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3 ஜாக்பாட் அடிக்கப்போகிறது. இது தொடர்பான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட உள்ளது. எனவே அதற்கானச் செலவுத் திட்டமிடலை இப்போதேத் திட்டமிடலாம்.
மத்திய அரசு ஊழியர்கள், செப்டம்பரில் ஊழியர்கள் 3 பெரிய பரிசுகளைப் பெறப் போகிறார்கள்.அதில் முதலாவது, ஊழியர்களின் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டாவதாக, நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை குறித்து அரசுடன் நடத்தும் பேச்சு வார்த்தையில் ஒரு முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
மூன்றாவது வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) தொடர்பானது. இதன் கீழ் பிஎஃப் கணக்கில் உள்ள வட்டி பணம் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரில் வரக்கூடும். அதாவது, செப்டம்பர் மாதம் ஊழியர்களின் கணக்கில் பெரிய தொகை வரப் போகிறது.
அகவிலைப்படி உயர்வு
அகவிலைப்படி அதிகரிப்பு ஏஐசிபிஐ இன் தரவைப் பொறுத்தது. முன்னதாக, மே மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளால் ஊழியர்களின் டிஏ அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டது. பிப்ரவரிக்குப் பிறகு வேகமாக வளர்ந்து வரும் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளுக்கு முன்பே, ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீடு மே மாதத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மே மாதத்தில் 1.3 புள்ளிகள் அதிகரித்து 129 புள்ளிகளாக அதிகரித்தது. ஜூன் எண்ணிக்கை 129.2ஐ எட்டியுள்ளது. இப்போது செப்டம்பரில் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்படும்.
18 மாத நிலுவைத் தொகை
டிஏ நிலுவைத் தொகை குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு காணப்படும். குறிப்பிடத்தக்க வகையில், 18 மாதங்களாக நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை (டிஆர்) விவகாரம் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு வந்துள்ளது. அது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில், விரைவில் அகவிலைப்படி நிலுவை பாக்கி கிடைக்கும் என்று மத்திய அரசு முழு நம்பிக்கையுடன் மத்திய ஊழியர்கள் உள்ளனர்.
பிஎஃப் வட்டி
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) 7 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு, வட்டி பணம் பற்றிய நல்ல செய்தியும் வரக்கூடும். இந்த மாத இறுதியில், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் வட்டி பணப் பரிமாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. பெறப்பட்ட தகவல்களின்படி, பிஎஃப் மீதான வட்டி கணக்கிடப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை 8.1 சதவீதம் என்ற வீதத்தில் பிஎஃப் வட்டி கணக்கில் வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க...