வேளாண் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு ஒன்றினை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது பட்டதாரிகளுக்கு ரூ. 3 லட்சம் மானியத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
புதுவையில் விவசாயச் சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களுக்கு எனச் சுய தொழில் புரிய ஏதுவாக மானியத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின்ன்கீழ் பயனடைய விரும்புபவர்கள் மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி அரசு வேளாண் தொழிலில் மேம்படுத்தும் வகையில் மானியத்தொகை வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இது குறித்து புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில், புதுச்சேரியில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவும் வகையிலும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள் தொழில் புரிய ஏதுவாகவும் அரசு சார்பாக 3 லட்சம் மானிய தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களுக்கு 75,000 மானியத்தொகையாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனைப் பெற்று தொழில் புரிய ஆர்வமுள்ளவர்கள் தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குனர் பயிற்சி வழி தொடர்பு திட்ட அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெறலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், www.agri.py.gov.in இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது. அதில் கேட்கப்படும் விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து மே 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தமிழகத்தில் காய்கறி சந்தைகளைப் புதுப்பிக்க 8 கோடி நிதி!
5 மாதங்களுக்கு அந்துப்பூச்சி தாக்கப்பட்ட PDS அரிசிதான் கிடைக்கும்!