மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து அதுவரை 31% ஆக இருந்த DA மற்றும் DR 3% உயர்த்தப்பட்டு, மார்ச் மாதம் முதல் 34% ஆக ஏற்றி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. அது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மத்திய அரசின்கீழ் பணிபுரியக்கூடிய ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் தங்களின் அகவிலைப்படி, அகவிலை நிவாரண அதிகரிப்பு குறித்து நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருக்கின்றனர். 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 34% அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தினைச் சரிசெய்யும் பொருட்டு ஊழியர்கள் மாறும் ஓய்வூதியதாரர்களின் DA மற்றும் DR ஆகியவற்றில் அரசு திருத்தம் கொண்டு வருகின்றது. தற்பொழுது, மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு வழங்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதத்தினை உயர்த்தி அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர்! இன்றே அப்ளை செய்யுங்க.!
மத்திய அரசு வழங்கபோகும் DA மற்றும் DR உயர்வுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரியளவில் எதிர்பார்ப்பிலிருந்து வருகின்றனர். சமீபத்தில் DA உயர்வு குறித்துச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தவறான தகவலை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அடிப்படையில் உள்ள சரிபார்ப்பாளர் கண்டறிந்தார்.
மேலும் படிக்க: TNPSC: கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
பொதுவாக அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணங்களின் விகிதங்களை உயர்த்துவது குறித்த அறிவிப்பு இந்தியப் பிரதமர் தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும். இந்த 2022ம் ஆண்டு ஜனவரி-1ம் தேதியன்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR உயர்வு குறித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க