Aadhar: Aadhaar card can be updated in Asia - new facility!
குடும்பத் தலைவரின் சம்மதத்தோடு, குடியிருப்பவர்கள் இணைய வழியாக ஆதாரில் முகவரியை மாற்றி அமைக்கும் முறையினை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் அடிப்படையில் ஆதார் அட்டையில் முகவரியினை மாற்றி அமைப்பதற்கு தங்கள் பெயரில் போதுமான ஆவணங்கள் இல்லாத குடியிருப்போரின் உறவினருக்கு இந்த புதிய முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பதாரருக்கும், குடும்பத் தலைவருக்கும் இடையேயான உறவு எந்த வகையானது என்பதைக் குறிப்பிட்டு, மேலும், பெயர்கள், ரேஷன் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், திருமண சான்றிதழ், கடவுச்சீட்டு உள்ளிட்ட தேவையான ஆவணங்களை ஆதாரமாக சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட உறவுமுறைக்கான ஆதார ஆவணம் இல்லாதபட்சத்தில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள குறிப்பிட்ட வடிவத்தில் குடும்பத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சுய சான்றிதழைப் பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது நிலுவையில் இருக்கின்ற இருப்பிடச் சான்று ஆவண வசதியுடன், இந்த முறை கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கிறது. 18 வயதிற்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் குடும்பத் தலைவராகக் கருதப்படுவதுடன், தமது முகவரியினை உறவினர்களுடன் இதற்காக பகிர்ந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
- இணைய வழியாக முகவரியை மாற்றும் வேளையில் https://myaadhaar.uidai.gov.in/ என்ற தளத்தில் இந்த ஆப்சனை பயன்படுத்தலாம்.
- குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணை சரிபார்த்தல் நடைமுறைக்காக பதிவு செய்தல் வேண்டும்.
- உறவுமுறை ஆவணச் சான்றை குடியிருப்போர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- இதைப் பயன்படுத்துவதற்கு கட்டணமாக ரூ.50 செலுத்தப்பட வேண்டும்.
- கட்டணம் செலுத்தப்பட்ட பின்பு குடும்பத் தலைவருக்கு இது குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
- அறிவிக்கை கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் குறிப்பிட்ட இணைய தளத்தில் குடும்பத் தலைவர் தமது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும்.
குறிப்பிடத்தகுந்த 30 நாட்களுக்குள் இந்த கோரிக்கையை குடும்பத் தலைவர் நிராகரிப்பு செய்தாலோ, அல்லது தமது முகவரியை பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்காவிட்டாலோ, சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிறுத்தப்பட்டு விடும். இது சம்பந்தமான தகவல், விண்ணப்பித்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இந்த சூழ்நிலையில் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க
இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை செக் பண்ணுவது எப்படி?