தமிழகத்தில் கொரோனாத் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன் போன்ற பற்றாக்குறைகள் குறித்து உதவிகள் பெற புதிய ட்விட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
பரவும் கொரோனா (Spreading corona)
தமிழகத்தில் கொரோனாத் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவருகிறது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து வருகிறது.
இதன் காரணமாக, மருத்துவமனையில் படுக்கைகள், தடுப்பு மருந்துகள், ஆக்ஸிஜன் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு (Government Announced)
எனவே இந்தத் தேவைகளை ஈடுசெய்யும் வகையில், தமிழக மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் இதர வசதிகள் பற்றிய புகார்கள் மற்றும் உதவிகளுக்கு ட்விட்டர் பக்கத்தில் கோரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
யு.சி.சி
இந்த நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் அனைத்து வரி துறைகள் இயக்குநரகங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த தலைமை மையத்தை (யு.சி.சி) உருவாக்கியுள்ளது.
சி.வி.ஐ.டி தொடர்பான சேவை (CVIID related service)
கொரோனா நோயாளிகளின் தேவைகளைத் தீர்ப்பது குறித்து நடவடிக்கைகளை இந்த மையம் மேற்கொள்ளும் என்றும், மோசமான நோயாளிகளுக்கு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைகளுக்கு தற்போதுள்ள 104 சுகாதார உதவி எண்ணுடன் ஒருங்கிணைந்து செயல்படும். சி.எம்.சி.எச்.ஐ.எஸ் போன்ற தற்போதைய சி.வி.ஐ.டி தொடர்பான சேவைகளுடன் யு.சி.சி தொடர்பில் இருக்கும்.
நிர்வாக போர்ட்டல் (Admin Portal)
மேலும் படுக்கைகள் காலியிட நிலையை அறிந்துகொள்வதற்கும், ஆன்ஸிஜன் ஐ.சி.யூ வசதிகளுடன் பொருத்தமான கோவிட் படுக்கைகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் யு.சி.சி தமிழ்நாட்டின் படுக்கை நிர்வாக போர்ட்டலை (Admin Portal) உருவாக்கியுள்ளது. இது தனியார் மற்றும் அரசு மருத்துவமனை என இரண்டையும் யு.சி.சி கண்காணிக்கும்.
படுக்கை வசதி (Bed)
சென்னையில் உள்ள தனியார் சுகாதார மருத்துவமனைகள், மற்றும் அரசு சுகாதார மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் அதிகரிப்பதிலும், ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்வதிலும் யு.சி.சி தொடர்ந்து செயல்படும். தனியார் மருத்துவமனைகள். படுக்கைகள் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவாக ஒரு புதிய ட்விட்டர் கணக்கு (@ 104GOTN) தொடங்கப்படும்.
கோரிக்கைகள் (Demands)
இந்த ட்விட்டர் கணக்கின் ஒரே நோக்கம் தனிநபர்கள் நேரடியாகப் படுக்கைகளைக் கோரவும் உதவியைப் பெறவும் உதவி செய்யும். மேலும் இந்த ட்விட்டர் கணக்கில் நோயாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் கையாளப்படும்.
#BedsForTN
கோரிக்கைகள் அதிகமாகும்போது, அதனை எளிதில் கண்டுகொள்ள, #BedsForTN என்ற ஹேஷ்டேக் அறிமுகப்படுத்தப்படும். இதில் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பது தொடர்பான தகவல்களை பெறலாம். இந்த வசதி தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்று தமிழக அரசு உறுதியாக நம்புகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க 8 பள்ளிகள் ஒப்படைப்பு- ஈஷா நடவடிக்கை!