நாம் அனைவருமே வங்கிக் கணக்கை பயன்படுத்துகிறோம். வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் கார்டு மூலமாக ஏடிஎம் மையத்தில் எடுக்கலாம். அப்படி ஏடிஎம் எந்திரத்தின் மூலமாக நாம் பணம் எடுப்பதற்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. குறிப்பிட்ட அளவு மட்டுமே இலவசமாக எடுக்க முடியும். அதைத் தாண்டி எடுத்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஏடிஎம் பரிவர்த்தனை (ATM Transaction)
ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் என்பது வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. எடுக்கும் பணத்தின் அளவு, எண்ணிக்கை போன்றவை வங்கிகள் தரப்பிலிருந்து நிர்ணயம் செய்யப்படுகிறது. வங்கிக் கணக்கு இருக்கும் ஏடிஎம் மெஷினில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படாது. ஆனால் மற்ற வங்கி ஏடிஎம்களில் எடுத்தால் கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் தொடர்பான சமீபத்தில் செய்தி ஒன்று அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அதாவது, நான்கு முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் வரியாக 150 ரூபாயும் சேவைக் கட்டணமாக 23 ரூபாயும் வசூலிக்கப்படும் எனவும், இந்த செய்தியை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள் எனவும் இந்த செய்தியில் உள்ளது. இது போலியான செய்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
PIB fact check சார்பாக நடத்தப்பட்ட சோதனையில் இது வதந்தி என்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாகப் பணம் எடுக்கலாம் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி எடுத்தால் பரிவர்த்தனை ஒன்றுக்கு அதிகபட்சமாக 21 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். மற்ற வரிகள் எதுவும் கிடையாது.
மேலும் படிக்க
பென்சன் தொகையை உயர்த்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை!
ATM பிஸினஸ்: வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம்: எப்படித் தொடங்குவது?