Others

Monday, 31 October 2022 09:38 PM , by: Elavarse Sivakumar

மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பள உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அடிப்படை சம்பளம் ரூ.26,000 மாக உயரும் எனத் தெரிகிறது.

ஃபிட்மென்ட் பேக்டர்

ஊழியர்களின் சம்பளக் கணக்கீட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.

பெரிய மாற்றம்

ஃபிட்மென்ட் காரணியில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும். அடுத்த ஆண்டு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரிசீலனை

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஃபிட்மென்ட் காரணியை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அதன் அடிப்படையில், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயாக உள்ளது.

ரூ.26,000 மாகும்

ஃபிட்மெண்ட் காரணி உயர்வு குறித்து முடிவு எடுக்கப்பட்டால் அடிப்படை சம்பளம் ரூ.26000 ஆக உயரும்.

52 லட்சம் பேர்

இந்த உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் சுமார் 52 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், ஃபிட்மென்ட் காரணியின் கீழ் உயரும்.

2.57%

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 2.57 சதவீதம் ஃபிட்மென்ட் வழங்கப்படுகிறது. இதை 3.68 மடங்கு அதிகரிக்கலாம். அதாவது 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்தினால் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000லிருந்து 26,000 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

இந்த எருமையின் விலை ரூ.35 கோடி- பாதாம், பிஸ்தாதான் உணவு!

100% மானியத்தில் உளுந்து சாகுபடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)