கோவிட் -19 பெருந்தொற்று காலங்களில் 5 இல் ஒரு பங்கு பெண்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதாக டிஜிட்டல் வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனமான ஸ்கிரிப் பாக்ஸ் (Scripbox) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது.
முதலீட்டுத் திட்டங்கள் (Investment schemes)
பெருந்தொற்றுகளால் ஏற்பட்ட பொருளாதார சரிவில் பெண்கள் தங்கம் மீதான முதலீடுகளைத் தாண்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மீது தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லாத வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் 100 ரூபாய் முதல் முதலீடு செய்ய பெரும் உதவியாகவும் இத்திட்டம் உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் முதற்கொண்டு அனைத்து தரப்பு முதலீட்டாளர்களுக்கும் இந்த சிப் திட்டமானது முதலீடுகளுக்கு ஒரு அருமையான வாய்ப்பாகவே உள்ளது. அதில் மதிப்பில் முதல் இடத்தைப் பிடித்த SIP ஃபண்ட் பற்றி இதில் காணலாம்.
ஐடிபிஐ இந்தியா டாப் 100 ஈக்விட்டி ஃபண்ட் (IDBI India Top 100 Equity Fund Direct-Growth):
இந்த ஃபண்டானது கிரிசில் ரேட்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது சந்தை அபாயங்கள் குறைந்த அதிக லாபம் தரும் ஃபண்டுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த ஃபண்டின் சிறப்பம்சமே இது ரியல் எஸ்டேட்டுகள் மற்றும் பிரபல வங்கிகளான ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ மற்றும் இன்ஃபோஷிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் முதலீடு செய்கிறது.
இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச சிப் (SIP) முதலீட்டுத்தொகையானது ரூ.500 ஆகும் அதே லம்ப்சம் (LUMP SUM) எனில் ரூ.5000 ஆகும். இந்த ஃபண்ட் இல்லத்தரசிகளுக்கு ஏற்ற ஒரு திட்டமாகும். சிப் முறையில் முதலீடு செய்தால் நீங்கள் ரூ.500 முதலீடு செய்தால் 3 வருடத்தில் 5 வருட இறுதியில் உங்களுக்கு ரூ.40,000 வரை கிடைக்கும்.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
மேலும் படிக்க
மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற LIC பாலிசி: மிஸ் பன்னாதிங்க!
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: ஜனவரியில் வெளியாகும் முக்கிய அறிவுப்பு!