Others

Monday, 22 November 2021 06:44 PM , by: R. Balakrishnan

Cash rain on the road

அமெரிக்காவில், டிரக் மூலம் கொண்டு செல்லப்பட்ட வங்கி பணம், டிரக் கதவு திறந்ததால் சாலையில் பறந்து செல்ல, அதனை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.

பறந்தது பணம் (Money)

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றின் பணம், டிரக் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென் டிரக்கின் கதவு திறந்து கொள்ள, சாலையில் பணம் பறக்க துவங்கியது. இதனை கண்ட வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை நிறுத்தி, பணத்தை அள்ளத் துவங்கினர்.

இதனால் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணத்தை எடுத்தவர்கள் திரும்ப தர வேண்டும் என அந்த வங்கி, மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணை (Investigation)

அந்த சாலையில் சென்ற வாகனங்களின் பதிவெண்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலர் நேர்மையாக முன்வந்து பணத்தை ஒப்படைத்துள்ளனர். அஜாக்கிரதையாக செயல்பட்ட டிரக் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஆதார் மூலம் பணம் அனுப்பலாம்: மிக எளிய வழிமுறை!

மாட்டுச் சாணத்தை சாப்பிடும் அதிசய மருத்துவர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)