1. Blogs

ஆதார் மூலம் பணம் அனுப்பலாம்: மிக எளிய வழிமுறை!

R. Balakrishnan
R. Balakrishnan

Send Money using Aadhar

டிஜிட்டல் உலகம் அபரிதமான வளர்ச்சி பெற்றுள்ள இந்த நவீன காலத்தில் பணபரிவர்த்தனைகள் (Money Transfer) என்பது டிவைஸ்களை கொண்டு ஒரு நொடியில் செய்ய கூடிய எளிதான விஷயமாக மாறி விட்டது. கோவிட் தொற்று இந்தியாவில் டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளுக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.

பணப் பரிவர்த்தனை (Money Transfer)

பொதுவாக பேமெண்ட்ஸ் ஆப்ஸ்கள் மூலம் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் பணத்தை பெரும் குறிப்பிட்ட நபர் பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் அல்லது UPIஅட்ரஸை கொண்டிருக்க வேண்டியுள்ளது. எனினும் தற்கால டிஜிட்டல் உலகிற்குள் (Digital World) முழுவதும் நுழையாமல் இன்னும் பல மக்கள் நாட்டில் இருக்கின்றனர். அவர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் அல்லது யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் எனப்படும் UPI id இல்லாததால் அவர்களுக்கு பணம் அனுப்புவது சிக்கலாகிறது.

இதனிடையே ஸ்மார்ட் போன் அல்லது UPI id இல்லாதவர்களுக்கும் கூட அவர்களது ஆதார் நம்பரை பயன்படுத்தி BHIM App யூஸர்கள் பணம் அனுப்பலாம் என்று UIDAI கூறி இருக்கிறது. நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு National Payments Corporation of India-வால் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் பேமெண்ட் ஆப் BHIM ஆகும். UIDAI-ன் அறிவிப்பு படி, ஆதார் நம்பரை பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கான ஆப்ஷன் BHIM App-ல் உள்ள பயனாளியின் முகவரியில் (beneficiary address) தெரியும்.

பணம் அனுப்பும் வழிமுறை (Steps to Money Transfer)

நீங்கள் ஒரு BHIM யூஸராக இருந்தால், பணம் அனுப்பவேண்டிய நபரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி பணபரிமாற்றம் செய்ய அவரது 12 டிஜிட் யுனிக் ஆதார் நம்பரை என்டர் செய்து verify பட்டனை அழுத்த வேண்டும். UIDAI வழங்கியுள்ள தகவலின் படி இதன் பின், ஆதார் லிங்கிங் மற்றும் பயனாளிகளின் முகவரியை சிஸ்டம் சரிபார்க்கும் மற்றும் யூஸர் அவருக்கு பணத்தை அனுப்ப முடியும். பணம் பெறுபவர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் வங்கியின் IFSC ஆகியவற்றை உள்ளிடுவதற்கு மாற்றாக இது பயனுள்ளதாக இருக்கும்.

DBT/ஆதார் அடிப்படையிலான கிரெடிட்களை பெற ஒருவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெறுநரின் வங்கிக் கணக்கு ஒருவருக்குப் பணம் மாற்றப்படும்போது அதில் வரவு வைக்கப்படும். பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் பே ஆப்ஷனையும் BHIM பெற்றுள்ளது. Aadhaar Pay POS பயன்படுத்தும் வணிகர்களுக்கு, ஆதார் எண் மற்றும் கைரேகை மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம்.

மேலும் படிக்க

வீட்டிலிருந்தே மாதம் ரூ.60,000 வரை சம்பாதிக்க வாய்ப்பு: SBI-யின் அதிரடி ஆஃபர்!

பள்ளி கட்டணம் செலுத்த EMI வசதி!

English Summary: Send money using Aadhaar: The simplest way!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.