மக்களின் சொந்த வீடுக் கனவை நனவாக்க, மத்திய அரசு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வீட்டுவசதி திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவு, சொந்த வீடு வாங்கத் திட்டமிடுவோருக்கு பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு வசதி திட்டம்
நாட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும் வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மானியத்தோடு வீடு கட்டுவதற்கு கடன் கிடைக்கிறது.
உயரும் தொகை
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கு விரைவில் ரூ.2 லட்சம் வழங்கப்படவிருக்கிறது. அதாவது இப்போது வழங்கப்படும் தொகையை விட மூன்று மடங்கு தொகை கூடுதலாக வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. வீடுகள் கட்டும் செலவு அதிகரித்துள்ளதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
வீடு கட்டுவதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் உதவித் தொகையை உயர்த்தி வழங்க ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்தது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்ட நான்கு லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் இதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் செலவுகள்
மணல், சிமென்ட், கம்பிகள், செங்கல் ஆகியவற்றின் விலையேற்றம் காரணமாக, கிராமப்புறங்களில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் விலை அதிகரித்துள்ளது.
ரூ.4 லட்சம் உதவி
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள் தங்கள் தரப்பிலிருந்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கொடுக்க முடியாது என்று விவாதிக்கப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் விலையை ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!