தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், இன்று, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, வேலுார், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுளது.
மேலும், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலுார், அரியலுார், கடலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆக்ஸ்ட் 12ம் தேதி, ஒரு சில உள் மாவட்டங்களிலும் கனமழையும் ஏனைய பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
சென்னையைப் பற்றி பேசுகையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் மற்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மேலும் படிக்க:
நகைக் கடன் தள்ளுபடி,எவருக்கெல்லாம்? வெளியான முக்கிய தகவல்!
25000 முதலீட்டில் மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்! அரசாங்கமும் மானியம் வழங்கும் !
Benefits of lemon: எலுமிச்சையில் இருக்கும் வியக்க வைக்கும் நன்மைகள்!