1. விவசாய தகவல்கள்

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Chance of heavy rain in 5 districts today!

Credit : DNA India

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை (South West Monsoon)

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் சில இடங்களில் கனமழையும் பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கனமழை (Heavy rain)

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

மிதமான மழை (Moderate rain)

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

10.07.21 மற்றும் 11.07.21 (10.07.21 and 11.07.21)

இதுதவிர, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதால், 10 மற்றும் 11ம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை (Chennai)

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

மேலும் குமரி கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடலை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தேசிய வானிலை  மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

09.07.21

தென்மேற்கு பருவ காற்று அரபிக் கடல் பகுதியில் வலுவடைந்து வருகிறது. இதனால், மேற்கு கடலோர பகுதியில் ஜூலை 9ம் தேதி முதல், மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கொங்கன் மற்றும் கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே கடலோர பகுதிகளில் ஜூலை 9ம் தேதி முதல் பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் தீவிர கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவ காற்று மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப்பின் சில பகுதிகள், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு ஜூலை 10ம் தேதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

Online Ration Card: இப்போது நீங்கள் வீட்டில் இருந்தே ரேஷன் கார்டைப் பெறலாம், இங்கே எளிதான வழியை அறிந்து கொள்ளுங்கள்

விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரே‌ஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!

English Summary: Chance of heavy rain in 5 districts today!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.