பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 February, 2022 11:40 AM IST

தக தகவென மின்னும் தங்கம், பெண்களின் விருப்பமான உலோகம். இதை அணிந்துகொள்ளும்போது, சமூகத்தில் தனி கவுரவம் கிடைக்கும் என்பதன் காரணமாகவே, தங்கம் எப்போதுமேப் பெண்களின் தேர்வாகவே இருக்கிறது. அதிலும் தென்னிந்தியாவில் நகைகளுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. திருமணம் மட்டுமல்லாது, பிற சடங்குகளிலும், தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத செயலாக உள்ளது எனலாம்.

மிகவும் விலை உயர்ந்த, இத்தனை முக்கியத்துவம் வாய்ந்தத் தங்கத்தை வாங்கும் போது, நம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்க நகைகள் வாங்கும் போது, அதில் போலி மற்றும் கலப்படம் இருப்பதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. சுத்தமான தங்கம் என்ற பெயரில் விற்கப்படும் சில நகைகளில், வெள்ளி, செம்பு, துத்தநாகம் கலக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அவ்வாறு நீங்கள் வாங்கும் தங்கம் உண்மையானதா அல்லது போலியா என்பதை பொற்கொல்லர்கள் சில வழிகளில் கண்டறிய முடியும்.

கலப்படத்தைக் கண்டறிய 

தண்ணீர்

  • ஒரு வாளியில் தண்ணீரை ஊற்றி அதில் உங்கள் நகைகளை போடவும்.

  • நகை மூழ்கினால், தங்கம் உண்மையானது என்றும், சிறிது நேரம் மிதந்தால், தங்கம் போலியானது என்றும் புரிந்து கொள்ளுங்கள்.

  • தங்கம் எவ்வளவு லேசானதாக இருந்தாலும், அது எப்போதும் தண்ணீரில் மூழ்கிவிடும்.

வினிகர்

  • சமையலுக்குப் பயன்படுத்தும் வினிகரைக் கொண்டும் தங்கத்தை சோதிக்க முடியும்.

    தங்க நகைகளில் சில துளிகள் வினிகரை தடவவும். அதன் நிறத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது போலியானது.

  • நிறத்தில் மாற்றம் இல்லை என்றால், அது உண்மை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நைட்ரிக் அமிலம்

  • தங்க நகைகளைத் துடைத்து அதன் மீது ஒரு சில துளிகள் நைட்ரிக் அமிலத்தைப் ஊறினால் அதன் நிறம் பச்சையாக மாறினால் தங்கம் போலியானது.

  • உண்மையான தங்கம் நிறம் மாறாது.

  • இருப்பினும், இந்த சோதனையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த அமிலம் நம் கைகளில் விழுந்தால், ஓட்டி ஏற்படும்.

வாசனை

  • தங்கத்தின் மீது வியர்வை பட்ட நிலையில், அதன் மீது வாசனை வீசுகிறது என்றால், அது கலப்படம் உள்ள தங்கம் என்று அர்த்தம்.

  • உண்மையான தங்கத்திற்கு வாசனை கிடையாது.

மேலும் படிக்க...

இதைச் செய்யாவிட்டால் உங்கள் PAN Card முடக்கப்படும்!

வெண்ணெயில் ஸ்டார்ச் கலப்படம்- கண்டுபிடிப்பது எப்படி?

English Summary: Counterfeit Gold in Circulation- Simple Ways to Test Quality!
Published on: 21 February 2022, 11:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now