மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை மாதத்தில் 4 சதவீதம் வரை உயரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டால், அகவிலைப்படி சதவீதம் 38%மாக உயரும். எனவே இந்தக் கூடுதல் தொகைக்கு ஏற்ப செலவிடுவது குறித்து, அரசு ஊழியர்கள் இப்போதேத் திட்டமிடலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி தற்போது வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியானது 38 சதவீதமாக உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் சம்பளமும் அதிரடியாக உயரும்.
அகவிலைப்படி
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்க அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதத்தில் அதிகரிக்கப்படலாம். மார்ச் மாதத்தில் வந்த அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI) புள்ளி விவரங்களில் இருந்து, ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
பணவீக்கம்
2022 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான AICP குறியீட்டில் சரிவு ஏற்பட்டது. AICP குறியீட்டு எண் ஜனவரியில் 125.1 ஆக இருந்தது. அதேபோல, பிப்ரவரி மாதத்தில் 125 ஆகவும், மார்ச் மாதத்தில் 126 ஆகவும் இருந்தது. ஏப்ரல் மாத விவரங்கள் இன்னும் வரவில்லை. அதேபோல மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான விவரங்களும் வந்த பிறகு குறியீடு 126க்கு மேல் சென்றால் அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு உள்ளது.
எவ்வளவு உயரும்?
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயரும். அப்படி உயர்ந்தால் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
அதிகபட்சம்
ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.56,900
புதிய அகவிலைப்படி (38%) ரூ 21,622/மாதம்
அகவிலைப்படி இதுவரை (34%) ரூ.19,346/மாதம்
எவ்வளவு அகவிலைப்படி 21,622 - 19,346 = ரூ.2,276/மாதம் அதிகரிக்கும்
ஆண்டு ஊதிய உயர்வு 2,276 x 12 = ரூ.27,312
குறைந்தபட்சம்
ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000
புதிய அகவிலைப்படி (38%) ரூ.6840/மாதம்
அகவிலைப்படி இதுவரை (34%) ரூ.6120/மாதம்
எவ்வளவு அகவிலைப்படி 6840 - 6120 = ரூ 720/மாதம் அதிகரிக்கும்
ஆண்டு ஊதிய உயர்வு 720 x 12 = ரூ.8,640
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!