நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் தொகுப்பு தங்கப் பத்திரம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தங்கப் பத்திரம் விற்பனை நடைபெறும். மத்திய அரசு சார்பில் தங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்கிறது.
தங்கப் பத்திரம் (Golden Bonds)
தங்கப் பத்திரங்களின் விலை இந்த முறை, கிராமுக்கு 5,197 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் தங்கப் பத்திரம் வாங்கினால் கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியுடன் 147 ரூபாய் என்ற விலைக்கு வாங்க முடியும். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு தங்கப் பத்திரம் நல்ல சாய்ஸ் தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்கப் பத்திரத்தின் மதிப்பும் உயரும். தங்கப் பத்திரத்துக்கு ஜிஎஸ்டி கிடையாது. மேலும், ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானமும் கிடைக்கும். செய்கூலி, சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் இல்லை. தங்கத்தை பாதுகாப்பாக சேமிப்பதில் இருக்கும் டென்ஷன் தங்கப் பத்திரத்தில் கிடையாது.
முதலீடு (Investment)
தங்கத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்து, செலவுகளை தவிர்த்து, நிறைய பலன்களையும், லாபமும் பெற விரும்புவோர் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யலாம். வங்கிகள், தபால் அலுவலகங்கள், பங்குச் சந்தை வாயிலாக தங்கப் பத்திரங்களை வாங்கலாம். இதுமட்டுமல்லாமல், தங்கப் பத்திரங்களை வைத்து கடனும் வாங்க முடியும். தங்க நகையை வைத்து கடன் வாங்குவதை போலவே தங்கப் பத்திரத்தையும் வைத்து கடன் வாங்கலாம்.
கடன் (Loan)
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் தங்கப் பத்திரத்தை வைத்து கடன் வாங்கலாம் என ரிசர்வ் வங்கி கூறுகிறது.
எஸ்பிஐ வங்கி தங்கப் பத்திரங்களுக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாயும், அதிகபட்சம் 20 லட்சம் ரூபாயும் கடன் வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 50,000 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகிறது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 50,000 ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகிறது.
மேலும் படிக்க
தங்கப் பத்திரங்கள் இன்று முதல் விற்பனை: முதலீடு செய்தால் நல்ல இலாபம்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்: எந்த மாநிலத்தில் தெரியுமா?