1. செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

R. Balakrishnan
R. Balakrishnan
1000 rs for Housewives

புதுச்சேரி பட்ஜெட் இன்று (ஆக.,22) தாக்கல் செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 10ம் தேதி, கவர்னர் உரையுடன் துவங்கியது; கவர்னர் தமிழிசை உரையாற்றினார். பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், கவர்னர் உரையை தொடர்ந்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. டில்லிக்கு விரைந்த முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து, புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

பட்ஜெட் தாக்கல் (Budjet)

புதுச்சேரி சட்டசபை இன்று (ஆக.,22) காலை நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 2022-23ம் ஆண்டுக்கான ரூ.10,696.61 கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் முக்கிய அம்சமாக, புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்

  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
  • உயர்நிலை பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி மீண்டும் துவங்கப்படும்.
  • காரைக்கால் - இலங்கை துறைமுகத்திற்கு பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து இந்தாண்டு துவங்கப்படும்.
  • சென்னை - புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை இந்தாண்டில் துவங்க தனியார் பங்களிப்பு கோரப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் அரசு போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் 25 இ-பேருந்து, 50 இ-ஆட்டோக்கள் வாங்கப்படும்.
  • புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும்.
  • காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும்.
  • புதுச்சேரியில் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டுகிறார்.

மேலும் படிக்க

யு.பி.ஐ., சேவைக்கு கட்டணம் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு!

டிஜிட்டல் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறைகள் என்னென்ன?

English Summary: Rs 1000 per month for Housewives: Do you know in which state? Published on: 22 August 2022, 01:46 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.