Others

Saturday, 31 December 2022 02:20 PM , by: R. Balakrishnan

Post Office Savings Scheme

ஜனவரி 1 முதல் போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான (அஞ்சலக கால வைப்புத்தொகை, என்எஸ்சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்) வட்டி விகிதங்களை 1.1% உயர்த்தியுள்ளது.

சிறுசேமிப்பு திட்டம்

அஞ்சலக கால வைப்புத்தொகை, என்எஸ்சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஜனவரி 1 முதல் 1.1 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் பெண் குழந்தை சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரித்தி மீதான வட்டி விகிதங்கள் இந்த முறை மாற்றப்படவில்லை.

புதிய வட்டி உயர்வு

தேசிய சேமிப்புச் சான்றிதழுக்கு (என்எஸ்சி) ஜனவரி 1 முதல் 6.8 சதவீத வட்டிக்கு எதிராக 7 சதவீத வட்டி விகிதம் இருக்கும் என்று மத்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேபோல், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் தற்போது 7.6 சதவீத வட்டிக்கு எதிராக 8 சதவீத வட்டி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள்:

  1. 1-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 6.5 சதவீதம்
  2. 2-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 6.8 சதவீதம்
  3. 3-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 6.9 சதவீதம்
  4. 5-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.0 சதவீதம்
  5. தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (NSC): 7.0 சதவீதம்
  6. கிசான் விகாஸ் பத்ரா: 7.2 சதவீதம்
  7. பொது வருங்கால வைப்பு நிதி: 7.1 சதவீதம்
  8. சுகன்யா சம்ரித்தி கணக்கு: 7.6 சதவீதம்
  9. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: 8.0 சதவீதம்
  10. மாதாந்திர வருமானக் கணக்கு: 7.1 சதவீதம்.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு ரூ.50 கோடி இடுபொருள் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு!

பெண்களுக்கான குறைந்த முதலீட்டுக்கான டிப்ஸ்: மாதம் 100 ரூபாய் போதும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)