1. செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.50 கோடி இடுபொருள் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Agri Inputs

வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு 48,593 விவசாயிகளுக்கு ரூ.50,88,84,224 இடுபொருள் நிவாரணமாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

வடகிழக்கு பருவமழை

கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகள் 3.11.2022 மற்றும் 11.11.2022 ஆகிய தினங்களில் பெய்த மிக பலத்த மழையினால் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் 14.11.2022 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இடுபொருள் நிவாரணம்

அதிகமாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் 32,533.4630 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.43,92,01,750.50/- வழங்கிடவும், மேலும், கடலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் 5,222.192 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 8562 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.6,96,82,473.50/- வழங்கிடவும், என மொத்தம் ரூ.50,88,84,224/-னை 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கிட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் உத்தரவிடப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

பெண்களுக்கான குறைந்த முதலீட்டுக்கான டிப்ஸ்: மாதம் 100 ரூபாய் போதும்!

பொதுமக்கள் கவனத்திற்கு : ஜனவரி மாத வங்கி விடுமுறை நாட்கள் இதோ!

English Summary: Rs. 50 crore relief fund for farmers: Tamil Nadu government announcement! Published on: 31 December 2022, 10:41 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.