அனைவருக்குமே சொந்த வீடு வைத்திருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. எனவே, எப்படியும் கடன் பெற்றாவது வீட்டினைக் கட்டி முடிக்க வேண்டும் என்று எண்ணுகிறவர்கள் ஏராளம். அந்த நிலையில் நீங்கள் இருக்கின்றீர்களா? அப்படியெனில் இந்த பதிவு உங்களுக்கானது ஆகும்.
மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
"கல்யாணத்தைப் பண்ணிப் பார்! வீட்டைக் கட்டிப் பார்" என்ற பழமொழியே இருக்கிறது. ஏனெனில் இரண்டுமே மிகப்பெரிய வேலைகளை உள்ளடக்கியன ஆகும். அதிலும் புது வீடு என்று பார்க்கும்போது இதைக் கட்டி முடிக்க நிறைய பொறுமை வேண்டும். பணத் தேவையும் அதிகம் தேவை என்பதை மறுக்க முடியாது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
பணத்தேவையினைப் பூர்த்திச் செய்ய அனைவரும் வங்கியினை நாடுகிறார்கள். வங்கிக் கடங்களைப் பெற எண்ணுகிறார்கள். அவ்வாறு, வீடு கட்ட கடன் வேண்டும் என எண்ணுகிற நிலையில் அனைவரும் சில குறிப்புகளைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அத்தகைய குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
குறிப்புகள்
- வீட்டுக்கு எனக் கடன் வாங்கும்போது முதலில் நாம் தேர்ந்தெடுக்கும் வங்கியில் எவ்வளவு வட்டி விகிதங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிதல் வேண்டும்.
- வட்டி விகிதம் குறைவாக இருந்தால், அந்த வங்கியில் கடனைப் பெறலாம் என்ற முடிவிற்கு வந்துவிடக் கூடாது.
- கடன் கொடுப்பதற்கு முன் இதர கட்டணங்கள் எவ்வளவு பெறப்படுகின்றது என்பதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
- கடனைப் பெற்றதும் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையினைத் தவணையாகச் செலுத்த வேண்டும்.
- இந்த தவணை தொகையினைச் செலுத்தாவிட்டால் வங்கி அபராதம் விதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு சர்ச்சை!
- வாங்கிய கடன் தொகையினைக் குறிப்பிட்ட தவணை காலத்திற்கு முன்னரே செலுத்த விரும்பினாலும் வங்கி உங்களுக்கு எவ்வித கட்டண சலுகையும் வழங்காது என்பதையும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
- சில வங்கிகள் கடன் தொகையில் 0.50% செயல்பாட்டு கட்டணத்தை வசூலிக்கின்றன.
- சில வங்கிகள் 7% வரை கடன் தொகையில் செயல்பட்டு கட்டணத்தை வசூலிக்கின்றன.
எனவே, உரிய தகவல்களைக் கேட்டு அறிந்த பின்பு வங்கியில் கடன் பெற்றுப் பயனடையுங்கள்.
மேலும் படிக்க
குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெறுவது எப்படி? வழிமுறைகள் இதோ!
பம்ப்செட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு: உற்பத்தியாளர்கள் அச்சம்!