காதலிக்கவோ அல்லது அதனை வெளிப்படுத்தவோ அச்சப்படக்கூடாது என்று, வெளிநாட்டில் படிக்கும் தனது மகனுக்கு ஒரு தாய் அறிவுரை வழங்கி இருக்கிறார். அந்த மகன் சாதாரணக் குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல. கலைஞரின் வாரிசு என்பதுடன், அமைச்சரின் மகன் என்பது கூடுதல் தகவல்.
லண்டனில்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் – கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் தம்பயின் மகன் இன்பநிதி மேற்படிப்பிற்காக லண்டனில் இருக்கிறார்.
சர்ச்சை
இந்நிலையில், இன்பநிதி ஒரு பெண்ணுடன் இருக்கமாக இருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இதனை சிலர் விமர்சித்து வருகின்றனர். மேலம் பல சர்ச்சையானக் கருத்துகள் இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், கிருத்திகா இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அம்மாவின் அட்வைஸ்
அதில், காதலிக்கவோ, அதை வெளிப்படுத்தவோ அஞ்சக்கூடாது. இயற்கையின் மகிமையை அறியும் வழிகளில் இதுவும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
அம்மாக்கள் இப்படிக் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டத்தொடங்கிவிட்டால், மகன்கள் சில்லென்று ஒரு காதல் மழையில் நனைய வேண்டியதுதான்.
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!