Others

Saturday, 25 June 2022 04:17 PM , by: Poonguzhali R

Everyone Invest in Gold! The main Four Investments!

பொதுவாக அனைவர் மத்தியிலும் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக இருந்து வருகிறது. இந்த விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை உயரும் போது, ​​மற்ற பத்திரங்களின் மதிப்பு குறைகிறது. பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் நம்பிக்கை இல்லாதபோது தங்க முதலீடுகள் நன்றாகச் செயல்படுகின்றன. இதற்கு வரலாற்று ரீதியாக சாட்சியும் இருக்கின்றது. இதை அறிந்த மக்கள் தங்கத்தில் தாராளமாக முதலீடு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து குவியும் சலுகைகள்!

தற்பொழுது, சரிந்து வரும் பங்குச் சந்தைகள் மற்றும் உள்நாட்டு நாணயத்தின் வீழ்ச்சிக்கு இடையில், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய தங்கத்தின் பக்கம் ஒரு சார்பாகத் திரும்பியுள்ளனர். இப்போதெல்லாம், தங்கத்தின் மீது முதலீடு செய்ய பல்வேறு வழி முறைகள் இருக்கின்றன. இந்நிலையில் நான்கு முக்கிய திட்டங்களில் தங்கத்திற்கான முதலீடைச் செய்யலாம். அவை,

  • தங்க நகைகள்
  • தங்க ஈடிஎஃப்கள் (கோல்ட் எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட்)
  • தங்கப் பத்திரங்கள் (SGB)
  • டிஜிட்டல் தங்கம்

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வு!

தங்க நகைகள்: பெரும்பாலான தங்கம் வாங்குவோர் இன்னும் தங்களிடம் உள்ள உலோகம் அனைத்தையும் தங்க நகைகளாக வாங்க விரும்புகிறார்கள். எனவே, தங்க நகைகளை வாங்கி முதலீடு செய்யலாம்.

தங்க ஈடிஎஃப்கள் (கோல்ட் எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட்): கோல்ட் எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட் என்பது என்னவென்றால் காகிதம் அல்லது டிமேட் வடிவத்தில் தங்கத்தை குறிக்கும் அலகுகள் என்பதாகும். பங்குகளைப் போலவே தங்க ஈடிஎஃப்களிலும் மக்கள் டிமேட் கணக்கு மூலம் வர்த்தகம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது. சுமார் 1 கிராம் தங்கத்தில் முதலீடு செய்யலாம். அதோடு, ஈடிஎஃப்களில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் வர்த்தகக் கணக்கு இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

தங்கப் பத்திரங்கள்: தங்கப் பத்திரங்கள் என்பது மத்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் அரசுப் பத்திரங்களைக் குறிக்கும். அவை கிராம் தங்கம் என்பதில் குறிக்கப்படுகின்றன. அதோடு, அவை தங்கத்தின் மாற்றாகவும் கருதப்படுகின்றன. தங்கப் பத்திரங்கள் முதலீட்டாளர்களைத் தங்கத்தைத் தனக்கே சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கின்றன என்று கூறப்படுகிறது.

டிஜிட்டல் தங்கம்: டிஜிட்டல் தங்கம் என்பது என்னவென்றால் உண்மையான உடைமை தேவையில்லாத விலைமதிப்பற்ற உலோகத்தில் (24 காரட்) முதலீடு செய்வதற்கான ஒரு மெய்நிகர் வழி என்பதைக் குறிக்கும். இதன் மூலம் ஆன்லைன் பணம் அல்லது UPI மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம். மேலும், விற்பனையாளர் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் இன்வாய்ஸை வழங்குவார் எனவும், நீங்கள் டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் நிறுவனம், தங்கத்தை அதன் பாதுகாப்பான பெட்டகத்தில் சேமிக்கிறது எனவும் கூறப்படுகிறது. அதோடு, டிஜிட்டல் தங்க முதலீட்டை ரூபாய் 1 முதல் தொடங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தோட்டக்கலையில் மானியம் வேண்டுமா? இன்றே விண்ணபியுங்கள்!

முட்டை விலை அதிரடி உயர்வு! மக்கள் அவதி!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)