Others

Friday, 23 April 2021 06:10 PM , by: KJ Staff

Credit : Samayam

உங்களது ஓய்வு காலத்தில் ஒவ்வொரு மாதமும் 27,000 ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பென்சன் (Pension) வேணுமா? பெரிய செட்டில்மெண்ட் தொகையும் கிடைக்கும். அதற்கு உடனே இந்தத் திட்டத்தில் சேருங்க. இந்த இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இன்றிலிருந்தே நீங்கள் சேமிக்க வேண்டும். அதற்கான சிறந்த திட்டம் எது என்று பார்த்து அதில் சேமிக்க வேண்டும்.

தேசிய பென்சன் திட்டம்!

தேசிய சேமிப்புத் திட்டம் (NPS) என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டம் முதலில் 2004ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. 18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

பயன்கள்!

தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் இப்போது 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இதன்படி, ரூ.15 லட்சம் கோடி வரையில் வரிச் செலவு மிச்சமாகும். இத்திட்டத்தில் நீங்கள் மாதத்துக்கு 1,000 ரூபாய் முதலீடு (Investment) செய்யலாம். இத்திட்டத்தில் டையர் 1, டையர் 2 என இரண்டு பிரிவுகள் உள்ளன. டையர் 2 பிரிவில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேமிப்புப் பணத்தை எடுக்கலாம்.

லாபம் எவ்வளவு?

நீங்கள் உங்களது 30ஆவது வயதில் இந்த தேசிய சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்கினால் உங்களது 60ஆவது வயதில் உங்களுக்கு செட்டில்மெண்ட் தொகையாக ரூ.1.36 கோடி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் மாதம் ரூ.27,352 பென்சன் பெறலாம். இதற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் 6,000 ரூபாயை இத்திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இதன் படிப் பார்த்தால் நீங்கள் 30 ஆண்டுகளில் முதலீடு செய்யும் தொகை ரூ.21.60 லட்சம். ஆனால் இத்திட்டத்தின் முதிர்வு காலத்தில் உங்களுக்குக் கிடைப்பது ரூ.1.36 கோடி மற்றும் மாதா மாதம் பென்சன்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இனி ஆதார் கார்டை லாக் செய்யலாம்? இது சூப்பர் வசதி!

உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க, பெஸ்ட் முதலீடு எதுன்னு பாருங்க!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)