1. மற்றவை

இனி ஆதார் கார்டை லாக் செய்யலாம்? இது சூப்பர் வசதி!

KJ Staff
KJ Staff
Aadhar Card Locking

Credit : Samayam Tamil

ஆதார் கார்டு இல்லாமல் ஒருவர் இந்தியாவில் உயிர் வாழ முடியாது என்று கூறும் அளவுக்கு ஆதார் கார்டுகள் மிக முக்கியமான தனிமனித ஆவணமாக உள்ளன. அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொபைல் எண், வங்கிக் கணக்கு (Bank account), பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. ஆதார், வங்கிக் கணக்கு போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதா என்ற அச்சமும் உள்ளது. ஆதார் எண் பாதுகாப்பானது தானா என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கும்

ஆதார் லாக் செய்ய

ஆதார் கார்டுகள் (Aadhar card) பாதுகாப்பானது தான் என்றாலும் ஆதார் எண்ணை லாக் செய்து வைக்கும் வசதியும் உள்ளது. தேவைப்பட்டால் கால் செய்துவிட்டு பின்னர் அதை ஓப்பன் செய்து கொள்ளலாம். இதன்மூலம் ஒருவரது ஆதார் எண்ணை மற்றொருவர் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும். அதார் கார்டை லாக் (Lock) செய்த பிறகு அந்த ஆதார் எண்ணை வைத்து ஆதார் ஆதண்டிகேசன் செய்ய இயலாது. அப்படி செய்ய வேண்டுமானால் விர்ச்சுவல் ஐடி மூலமாகவே செய்ய முடியும். மீண்டும் அன்லாக் செய்தால்தான் அந்த ஆதார் எண்ணை இதற்குப் பயன்படுத்த முடியும்.

விர்ச்சுவல் ஐடி

  • விர்ச்சுவல் ஐடி உங்களிடம் இருந்தால் தான் ஆதார் கார்டை லாக் செய்ய முடியும். அப்படி விர்ச்சுவல் ஐடி உங்களிடம் இல்லாவிட்டால் அதை நீங்களே உருவாக்கலாம்.
  • ’GVID space last 4 digit UID நம்பர்’ என டைப் செய்து 1947 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
  • உதாரணம்: GVID 2345
  • இப்போது ஆதார் வலைதளத்தில் சென்று ’Aadhaar service’ என்ற பிரிவின் கீழ் ’Lock & Unlock’ என்பதை கிளிக் செய்யவும்.
  • UID பட்டனை செலெக்ட் செய்து அதில் உங்களது UID நம்பர், பெயர், PIN code உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யவும்.
  • 'Send OTP' என்பதை கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும்.
  • இப்போது உங்களது ஆதார் எண் லாக் செய்யப்பட்டு விடும்.
  • மீண்டும் உங்களது ஆதார் எண்ணை அன்லாக் செய்வதற்கு ஆதார் வலைப்பக்கத்தில் Unlock பட்டனை கிளிக் செய்து விர்ச்சுவல் ஐடியைப் பதிவிட்டு send OTP மற்றும் submit கொடுத்தால் அன்லாக் ஆகி விடும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மத்திய அரசின் அவசரகால கடன் திட்டத்தில் சுகாதாரத் துறையும் சேர்ப்பு!

கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில், உலக அளவில் இந்தியா முதலிடம்

English Summary: Can I lock my Aadhar card now? This is super convenient!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.