நீங்கள் ஒரு சிறந்த பிசினஸை உருவாக்க மற்றும் நிறுவனத்தின் கலாச்சாரத்தை வடிவமைக்க விரும்பும் ஒரு தலைவராக இருந்தால், 24/48 விதி நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எந்தவொரு நிறுவனத்தை எடுத்து கொண்டாலும், 24/48 விதியானது பொருந்தும். 24 மற்றும் 48 என இரண்டு பெட்டிகளைக் கொண்டுள்ளன. மேலும் அந்த எண்கள் அந்த பெட்டிகளில் உள்ளவர்கள் செயல்படும் சுற்றுப்புற வெப்பநிலையைக் குறிக்கும்.
24/48 விதி (24/48 Rule)
24 டிகிரி என்பது குளிரூட்டப்பட்ட கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ளவர்களை குறிக்கிறது. அவர்கள் பெரிய முடிவுகளை எடுப்பவர்கள், முழு அமைப்பையும் இயக்கும் கொள்கைகள் மற்றும் உத்திகளை வடிவமைப்பவர்கள். மேலும் 48 டிகிரியில் சந்தையில் மக்கள் இருக்கிறார்கள். விற்பனைக் குழுக்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் வெப்பத்திலும் தூசியிலும் வேலை செய்கிறார்கள். ஒரு வெற்றிகரமான வணிகத்தை உருவாக்க, 24 டிகிரி சூழலில் உள்ளவர்கள், எப்போதும் 48 டிகிரியில் பணியாற்றுவோரின் மனதில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். வணிகங்கள் தங்கள்
யோசனைகள் மற்றும் உத்திகளை செயல்படுத்துவதற்கும், உண்மையில் அவர்களின் வெற்றிக்காகவும் 48 டிகிரி பணியாளர்களை சார்ந்துள்ளது. ஏசி அறையில் எடுக்கப்படும் முடிவுகள் மேதைகளின் படைப்புகளாக தோன்றலாம். ஆனால் 48 டிகிரி என்பது நிஜ உலகில் அவர்கள் எப்படி விளையாடலாம், எப்போது இடைநிறுத்துவது என தெரியும். நல்ல தலைவர்கள் தங்கள் திட்டங்களை 48 டிகிரி சூழலில் சோதிக்க கற்றுக்கொள்கிறார்கள். கருத்து கேட்கிறார்கள். பின்னர் முன்னேறுகிறார்கள். 24/48 விதியானது நிறுவனங்கள் முழுவதும், உலகம் முழுவதும் இயங்குகிறது.
இரண்டு யோசனைகள் (Two Ideas)
உங்கள் நிறுவனத்தின் நன்மைக்காக 24/48 விதியைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் இரண்டு யோசனைகளை நடைமுறைபடுத்தலாம்.
ஒன்று, நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும், முன்னின்று நிறுவனத்திற்காக களத்தில் வேலை செய்பவர்களுடன் நேரத்தை செலவிடுவது, வாடிக்கையாளர்களை சந்திப்பது ஆகியவற்றை கட்டாயமாக்குங்கள்.
வருடத்தில் ஒருநாள் கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ளவர்கள் அனைவரும், வெளியே சென்று சந்தையில் நேரத்தை செலவிட வேண்டும். கிட்டத்தட்ட மேஜிக் போல இது அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு மற்றும் பரஸ்பர மரியாதைக்கு வழி வகுக்கிறது.
இரண்டாவது யோசனை, சந்தையில் பணியாற்றும் பணியாளர்களை ஒருநாள் அலுவலகத்தில் இருக்க வாய்ப்பு அளிப்பது. இது களத்தில் பணியாற்றுவோருக்கு, அவர்களின் மாறுபட்ட கண்ணோட்டத்தை பார்க்க அனுமதிக்கிறது. மேலும் அவர்கள் வணிகத்தில் அக்கறை கொண்டவர்கள் மட்டுமல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தி மனதைத் திறக்கிறது.
24/48 விதியை முயற்சி செய்து பாருங்கள். இது வியாபாரத்திற்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லதாக இருக்கும்.
மேலும் படிக்க
தமிழகத்தில் டாப் 10 ஏற்றுமதி மாவட்டங்கள்: முதலிடம் பிடித்த மாவட்டம் எது!
ஆசியாவின் பணக்கார பெண்கள் பட்டியல்: முதலிடத்தைப் பிடித்தார் இந்தியப் பெண்!