1. செய்திகள்

தமிழகத்தில் டாப் 10 ஏற்றுமதி மாவட்டங்கள்: முதலிடம் பிடித்த மாவட்டம் எது!

R. Balakrishnan
R. Balakrishnan
Yop 10 Export Districts in Tamilnadu

தமிழக ஏற்றுமதி வர்த்தகத்தில் 'டாப் 10' மாவட்ட வரிசையில், காஞ்சிபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் ஏற்றுமதியில், குஜராத் முதலிடம், மஹாராஷ்டிரா இரண்டாமிடம், தமிழகம் மூன்றாமிடம் பிடித்துள்ளது.

ஏற்றுமதி (Export)

கடந்த 2019 - 2020 ஆம் நிதியாண்டில், 2.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் மொத்த பொருள் ஏற்றுமதி, கொரோனாவால், 2020 - 2021 ஆம் நிதியாண்டில், 1.92 லட்சம் கோடி ரூபாயாக சரிவை சந்தித்தது. இந்த வர்த்தகம் தற்போது, மீண்டும் எழுச்சி பெறத் துவங்கியுள்ளது. 2021 - 2022 ஆம் நிதியாண்டில், 2.62 லட்சம் கோடி ரூபாயாக சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது.

தமிழகத்தில் 10 மாவட்டங்கள் (Top 10 Districts in Tamilnadu)

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், 2021 - 2022 ஆம் நிதியாண்டுக்கான ஏற்றுமதி வர்த்தக புள்ளி விவரப்படி, தமிழகத்தில் 10 மாவட்டங்கள் ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கின்றன.

  1. காஞ்சிபுரம் - 73,340 கோடி ரூபாய்
  2. சென்னை - 41,714 கோடி
  3. திருப்பூர் - 35,834 கோடி ரூபாய்
  4. கோவை - 23,654 கோடி ரூபாய்
  5. கிருஷ்ணகிரி - 16,826 கோடி ரூபாய்
  6. திருவள்ளூர் - 16,003 கோடி ரூபாய்
  7. வேலுார் - 7,558 கோடி ரூபாய்
  8. கரூர் - 7,513 கோடி ரூபாய்
  9. துாத்துக்குடி - 6,623 கோடி ரூபாய்
  10. ஈரோடு - 4,204 கோடி ரூபாய்

இந்த 10 மாவட்டங்கள் மட்டும், 2.33 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளன. மாநில மொத்த ஏற்றுமதியில், 10 மாவட்டங்களில் பங்களிப்பு, 88.9 சதவீத அளவில் உள்ளது.

மேலும் படிக்க

தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலாத் துறை தொழில்முனைவோருக்கு விருது!

சிசிடிவி கேமரா: மருத்துவ கல்லூரிகளில் கட்டாயம்!

English Summary: Top 10 export districts in Tamil Nadu: Which is the top district! Published on: 29 July 2022, 12:47 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.