பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாநில அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதற்காகவும் அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
அரசு ஊழியர்களைப் பொருத்தவரை, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக பல ஆண்டுகளாக புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தால், பல சலுகைகள் கட் செய்யப்பட்டு விட்டன. இதனால், அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
Amul Recruitment 2022: சூப்பர் வேலைவாய்ப்பு, 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்
தற்போதைய பென்சன் திட்டத்தில் ஊழியர்களுக்கான சலுகைகள் குறைவுதான். அதோடு கிடைக்க வேண்டிய பலனும் சரியாகக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
ராஜஸ்தானில் அமல்
இந்நிலையில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2004 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு இணைந்த அனைத்து ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
இரட்டிப்புச் சலுகை
பழைய பென்சன் திட்டத்தின் பயன்களைப் பெறும் அரசு ஊழியர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநில அரசின் சுகாதார திட்டத்தின் கீழும் பயன்பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Breaking: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, "பேரறிவாளன் விடுதலை"
தமிழக அரசு முன்வருமா?
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பல்வேறு துறை ஊழியர்கள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். எனவே விரைவில் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!
குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!