இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 25 May, 2022 8:21 AM IST

தகுதியற்ற பயனாளிகள் தங்களது ரேஷன் கார்டை உடனடியாக சரண்டர் செய்ய வேண்டும் என்று இந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மோசடிகளைத் தடுக்கும் விதமாக இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினர், இனி வரும் நாட்களில் ரேஷன் பொருட்களை வாங்க முடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது.

ரேஷன் அட்டை

இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் பயனாளிகளுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த ரேஷன் அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கும் இலவசமாகவும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், நிதியுதவி, வேட்டி - சேலை போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளும் இந்த ரேஷன் அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு, வழங்கப்படுகின்றன.

ஒரே நாடு ஒரே ரேஷன்

மத்திய அரசு சார்பாக ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, மாநிலங்களில் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இத்திட்டம் வந்த பிறகு ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலுக்கு வந்த பிறகு ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகளில் அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, தகுதியுள்ள பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருக்கிறது. ஏனெனில், தகுதியற்ற பலர் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி அவற்றைக் கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்து போன்ற புகார்கள் அதிகமாக உள்ளன. இதனால் உதவி தேவைப்படுபவர்களும் கிடைக்காமல் போகிறது.

மாநில அரசு அதிரடி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தகுதியற்ற பயனாளிகள் தங்களது ரேஷன் கார்டுகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைக்காமல் இருந்தால் அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் தகுதியுடைய பயனாளிகள் என்பதற்கும் வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தகுதி

  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பதற்கு அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

  • குடும்பத் தலைவிகளுக்கு ரேஷன் பயன்கள் கிடைக்கும். அதுவும் 18 வயதைத் தாண்டியவராக இருக்க வேண்டும்.

  • ஒருவேளை குடும்பத் தலைவர் 60 வயதுக்கு மேல் இருந்து அவர் நோய்வாய்ப்பட்டு அவரது குடும்ப வருமானம் மாதத்துக்கு 15,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அந்த ரேஷன் பலன்களை குடும்ப உறுப்பினர்கள் பெறலாம்.

யாருக்குக் கிடையாது?

  • நான்கு சக்கர வாகன வைத்திருப்பவர்கள்.

  • 100 சதுர அடிக்கு மேல் புக்கா வீடு வைத்திருப்பவர்கள்.

  • அரசு ஊழியர்கள்.

  • வருமான வரி செலுத்துவோர்.

  • வீட்டில் ஏசி, ஜெனரேட்டர் வைத்திருப்பவர்கள்.

  • 80 சதுர அடிக்கு மேல் தொழில் நிறுவனங்கள், ஆலை வைத்திருப்பவர்கள்.

  • நகர்ப்புறங்களில் குடும்ப வருமானம் ஆண்டுக்கும் ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள்.

  • ஆயுத உரிமம் வைத்திருப்பவர்கள்.

  • இவர்கள் அனைவரும் ரேஷன் அட்டையை ஒப்படைக்க வேண்டும். மீறினால், தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

English Summary: Have to hand over the ration card- no more supplies!
Published on: 25 May 2022, 08:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now