இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 September, 2021 7:08 PM IST
PAN card without documents

பான் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாகும். இப்போது பயனர்கள் இலவசமாக பான் அட்டையை பெற முடியும். ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பான் கார்டைப் பெற முடியும்.

PAN அட்டை 10 இலக்க ஆல்ஃபாநியூமெரிக் PAN எண்ணுடன் வரும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். இது பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் மற்றும் அன்றாட வாழ்வில் மிகவும் தேவைப்படும் பல முக்கிய பணிகளை மேற்கொள்ள பயன்படுகிறது. ஆனால், இது ஒரு முக்கிய ஆவணம் என்பதால், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பான் கார்டைப் பெற முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உடனடி PAN வெளியீடு (instant PAN issuance) ஆதார் அடிப்படையிலான eKYC பயன்பாட்டை உள்ளடக்கியது.

இலவச PAN க்கு எப்படி விண்ணப்பிப்பது

  • புதிய வருமான வரி இணையதளத்திற்கு செல்லவும். 'Instant PAN'-க்கு செல்லவும்.
  • இந்த வசதி இ-பான்-ஐ ரியல் டைம் அடிப்படையில் வழங்குகிறது. இது PDF வடிவத்தில் வருகிறது.
  • பின்னர் 'Get new E-PAN'-ஐக் கிளிக் செய்யவும்
  • அதன்பிறகு உங்கள் ஆதார் (Aadhaar) எண்ணை உள்ளிட்டு, 'நான் அதை உறுதிப்படுத்துகிறேன்' என்ற செக் பாக்ஸை டிக் செய்யவும்.

பின்னர் வருமான வரித்துறை சில விஷயங்களில் உங்கள் பதில்களைக் கேட்கும். அவை பின்வருமாறு:

  1. எனக்கு இதற்கு முன்னர் PAN அளிக்கப்பட்டதில்லை.
  2. எனது செயலில் உள்ள மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
  3. எனது பிறப்பு விவரங்கள் முழுவதும் ஆதார்-இல் உள்ளன.
  4. PAN விண்ணப்ப தேதியின்படி நான் மைனர் அல்ல.

இவற்றுக்கான உறுதிப்பாட்டை நீங்கள் அளித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்டவுடன், 15 இலக்க ஒப்புதல் எண் (acknowledgement number) உருவாக்கப்படும்.

பான் நகல் உருவாக்கப்பட்ட பிறகு ஆதார் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அது அனுப்பப்படும்.

உடனடி PAN விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது:

உங்கள் பான் கோரிக்கையின் நிலையை கண்காணிக்க ஒப்புகை எண்ணைப் (acknowledgment number) பயன்படுத்த வேண்டும். 'Instant PAN through Aadhaar' என்ற இணைப்பை கிளிக் செய்து, பின்னர் 'Check Status of PAN' -ஐ கிளிக் செய்யவும்.

அதன்பிறகு குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆதார் எண்ணை சமர்ப்பித்து, ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பிய OTP ஐ சமர்ப்பிக்கவும். கடைசியாக, PAN விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்கவும்.

மேலும் படிக்க

போலீசாருக்கு 8 மணி நேர வேலை: ஐகோர்ட் உத்தரவு!

அடல் பென்ஷன் திட்ட விதியில் சிறிய மாற்றம்!

English Summary: Here is a simple way to get a free PAN card without documents
Published on: 13 September 2021, 07:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now