பொதுவாக, சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்கள் அளவானவை ஆகும். ஆனால், பெரும்பாலான வங்கிகள் ஆண்டுக்கு 3.5 சதவீதம் முதல் 4% வரை விகிதங்களாக வழங்கி வருகின்றன என்பது நினைவுக்கூறத்தக்கது.
நிலையான சேமிப்புக் கணக்கில் சிறந்த விகிதத்தைப் பெறுவதற்கும் அதிக வருமானம் ஈட்டுவதற்கும் குறிப்பிட்ட வழிகள் இருப்பதாக ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி குறிப்பிடுகிறது.
சராசரி மாத இருப்பு – Average monthly balance
அடிப்படை சேமிப்புக் கணக்கு மற்றும் ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் தவிர, நாம் வைத்திருக்கும் கணக்கு வகையைப் பொறுத்து குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்க அனைத்து வங்கிகளிலும் ஒரு அளவுகோல் என்பது உள்ளது. பில்கள் மற்றும் பிற செலவுகள் போன்ற மாதாந்திர செலவுகளுக்குச் செலுத்துவதற்கு, தங்கள் சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகப் பயனுடையதாக இருக்கும். வங்கியிடமிருந்து அபராதம் விதிக்கப்படுவதைத் தடுப்பது அவசியம். சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் தொகையைக் குறைந்தபட்ச மாதாந்திர மதிப்பினைச் சரிவர நடைமுறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
3 லட்சம் மானியத்தில் சோலார் மின் இணைப்பு பெறுவது எப்படி?
ஹெச்டிஎஃப்சி வங்கி இணையதளத்தின்படி, சராசரி மாத இருப்பு ரூ. 10,000 எனக் கூறப்படுகிறது. இதை மாதத்தின் ஒவ்வொரு நாளும் அந்த இருப்பை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. செலவுகள் மற்றும் வரவுகளை சராசரியாக ரூ. 10,000 என்பதை இருப்பாக வைத்துக் கொண்டால் வட்டியைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
சேமிப்புக் கணக்கு– Offers on shopping sites
மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்குகள், குழந்தைகள் சேமிப்புக் கணக்குகள், மற்றும் இளைஞர் சேமிப்புக் கணக்குகள் முதலான சேமிப்புக் கணக்குகளை வைத்துக் கொள்ளுதல் மற்றொரு வழி ஆகும்.
ஆப்பிள் ஐபோனுக்கு அதிரடி தள்ளுபடி! ரூ.2500-க்கு ஐபோன்!!
இந்தக் கணக்குகள் அதிக வட்டி விகிதத்தைச் செலுத்தும் அதே வேளையில் கூடுதல் பலன்களையும் வழங்குகின்றன எனக் கூறப்படுகிறது. உதாரணமாக, மூத்த குடிமக்களுக்கான கணக்குகளுக்கு வழக்கமான சேமிப்புக் கணக்குகளை விட அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகின்றன. ஸ்வீப் இன் வசதியை அறிமுகப்படுத்துவதன் மூலம் கணக்கின் வருமானத்தை அதிகரிப்பது எளிது எனக் கூறப்படுகிறது. நம் பணத்திலிருந்து அதிகப் பலன்களைப் பெற, சலுகைகளை வழங்கும் சேமிப்புக் கணக்கைத் தேர்வுசெய்ய வேண்டும்.
ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதம் உயர்வு! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
ஸ்வீப் இன் வசதி – Sweep In facility
ஸ்வீப் இன் என்பது ஒரு தானியங்கி வசதி ஆகும். இந்த ஸ்வீப் இன்-இல் குறிப்பிட்ட வரம்புக்கு அப்பாற்பட்ட பணம் தானாகவே நிலையான வைப்புத்தொகையாக மாற்றப்படலாம். செயலற்ற நிதிகளை சேமிப்புக் கணக்கில் வைப்பதை விட நிலையான வைப்புகளில் முதலீடு செய்து, அந்த விகிதங்களில் வட்டியைப் பெறுவது சிறந்த முறையாகும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும்: அதிரடி அறிவிப்பு!
விவசாய ஊடகம் மற்றும் தொழில்துறை அமைப்பின் கூடுகை: கூட்டத்தின் சாரம் என்ன?