தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் விவரங்கள் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வெளியிட்டார். தமிழகத்தில்ன் மொத்தமாக 6,20,41,179 வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3,04,89,866 என்ற எண்ணிக்கையிலும், பெண் வாக்காளர்கள் 3,15,43,286 என்ற எண்ணிக்கையிலும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 என்ற எண்ணிக்கையிலும் இருக்கின்றனர்.
இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை பெற்றிருக்கிறது எனத் தகவல் தெரிவிக்கின்றது. இந்த தொகுதியில் மொத்தம் 6,66,295 வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆண்கள் 3,34,081 பேர். பெண்கள் 3,32,096 பேர். மூன்றாம் பாலினத்தவர் 118 பேர். இதற்கு அடுத்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி இருக்கிறது. கவுண்டம்பாளையம் தொகுதியில் மொத்தம் 4,57,408 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,27,835 பேர். பெண்கள் 2,29,454 பேர். மூன்றாம் பாலினத்தவர் 119.
தமிழகத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்தில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி இருக்கிறது. இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,70,125 பேர் ஆகும். இதில் ஆண்கள் 88,396 என்றும், பெண்கள் 81,670 என்றும் மூன்றாம் பாலினத்தவர் 59 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்
அடுத்த நிலையில் இரண்டாமிடத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,75,128 ஆவர். இதில் ஆண்கள் 85,652 என்ற நிலையிலும், பெண்கள் 89,474 என்ற நிலையிலும் மூன்றாம் பாலினத்தவர் 2 என்ற நிலையிலும் இருக்கின்றனர். ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 3,310 வெளிநாடு வாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் மற்றும் குடும்பத்தினரின் பெயர் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் https://www.elections.tn.gov.in/rollpdf/SSR2023_MR_05012023.aspx என்ற தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் பக்கத்தில் சென்று பார்வை இடலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க