ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் வங்கிகணக்கில் பேலன்ஸ் இல்லாவிட்டாலும், 10,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளமுடியும். இந்த வசதியை மத்திய அரசு வழங்குகிறது. இந்த தொகை உங்கள் வங்கிக்கணக்கில் வந்துவிட்டதா என்பதை நீங்களே மிஸ்டு கால் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
2014 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜன் தன் யோஜனா திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். மேலும் தேசிய அளவிலான நிதி சேவைகளை பெறுவதற்கும் இந்த திட்டம் வழி வகுக்கிறது. மேலும் பணம் அனுப்புவதற்கும் வங்கி சேமிப்பு மற்றும் ஓய்வூதியம் ஆகிய சேவைகளுக்கும் PMJDY என அழைக்கப்படும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். நாடு முழுவதும் மாநிலங்களின் தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்டங்களிலும் அதன் தலைநகரங்களிலும் இந்த திட்டம் துவங்கப்பட்டது.
ரூ.10,000 கடன்
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்கள் பத்தாயிரம் வரை ஓவர் ட்ராஃப்ட் மூலம் கடன் பெற்றுகொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு உங்களது ஜன் தன் கணக்கானது துவங்கப்பட்டு குறைந்த பட்சம் ஆறு மாதம் ஆகி இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களால் இரண்டாயிரம் ரூபாய் வரை மட்டுமே ஓவர் ட்ராஃப்ட் பெற முடியும். உங்கள் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் இந்த தொகையைப் பெற முடியும்
தகுதி
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அடல்ட் பென்ஷன் யோஜனா, மைக்ரோ யூனிட் டெவலப்மென்ட் அண்ட் ரீபைனான்ஸ் ஏஜென்சி வங்கி ஆகிய திட்டங்களை பெறுவதற்கு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்துள்ளவர்கள் தகுதியானவர்கள் ஆவர்.
ஆதார், பான்
நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவக்க விரும்பினால் உங்களுக்கு ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை இருந்தால் மட்டும் போதும். உங்களுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்ட பிறகு உங்களுக்கான ஏடிஎம் கார்டு கொடுக்கப்படும். அதை வைத்து நாடு முழுவதும் எந்த ஏடிஎம் மெஷின்களில் இருந்தும் உங்களால் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.
பிற சலுகைகள்
இதில் ஒரு லட்சம் ரூபாய் வரை விபத்துக்கான காப்பீடு, முப்பதாயிரம் ரூபாய் வரை ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது. மேலும் ஆயுள் காப்பீட்டுக்கான சந்தா தொகையை மத்திய அரசே செலுத்தும். மாநில அரசு துறைகளின் திட்டங்களில் பயன்பெறும் நபர்களுக்கான தொகை அவரவர் வங்கி கணக்குகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும். முக்கியமாக இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூபே கிஷான் என்ற அட்டைகளை வழங்கப்படுகிறது.
47 கோடி
ஜன்தன் கணக்கு வைத்திருப்போர் வங்கியில் இருந்து மாதம் ரூ.10,000 மட்டுமே பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பணம் எடுக்க வேண்டுமானால் வங்கி மேலாளரின் அனுமதி பெற வேண்டும். நாடு முழுவதும் 47 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், PFMS websiteல் மூலம் உங்கள் கணக்கில் உள்ள தொகையைத் தெரிந்துகொள்ளமுடியும்.
மிஸ்டு கால்
அது மட்டுமல்லாமல் 18004253800 ,1800112211 ஆகிய கட்டமில்லாத தொலைபேசி அழைப்பு மூலமும், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள மினிமம் பேலன்ஸ் குறித்த விபரத்தைத் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு SMS மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் படிக்க...