தமிழகத்தின் மேற்குப் பகுதிகளில் மிளகாய், தக்காளி மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களையும், தஞ்சாவூரில் நெல் மற்றும் தென் தமிழகத்தில் உளுந்து போன்ற பயிர்களையும் மயில் சேதப்படுத்துகிறது என்று ஆய்வு குழு கண்டறிந்துள்ளது.
பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான சலீம் அலி மையம் (SACON), மயில்களின் மக்கள் தொகை மற்றும் நடத்தையை ஆய்வு செய்து, அவை பயிர்களைத் தாக்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக வனத் துறையால் ஈடுபடுத்தப்பட்டது. இது கடந்த ஆறு மாதங்களாகச் செயல்பட்டு வருகின்றது.
மயில்கள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் பலமுறை புகார் அளித்ததைத் தொடர்ந்து, வனத்துறையினர் SACON நிறுவனத்தை அணுகினர், இது முதன்மை விஞ்ஞானி எச்.என். குமாரா, மூத்த விஞ்ஞானி எஸ் பாபு, ஆராய்ச்சி உயிரியலாளர்கள் அரவிந்த் மற்றும் கிஷோர் ஆகியோருடன் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது. இத்திட்டத்திற்காக மாநில அரசு ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது
இக்குழுவினர் கள ஆய்வு, மயில்கள் கணக்கெடுப்பு மற்றும் பறவைகளால் ஏற்படும் பயிர் சேதத்தின் அளவை மதிப்பீடு செய்து வருகின்றனர். ஆதாரங்களின்படி, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளில் மிளகாய், தக்காளி மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களையும், தஞ்சாவூரில் நெல் மற்றும் தென் தமிழகத்தில் உளுந்து போன்ற பயிர்களையும் மயில் சேதப்படுத்துகிறது என்று குழு கண்டறிந்துள்ளது.
மயில்களின் ஊடுருவலால் விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மதிப்பிடுவதே இதன் நோக்கம் ஆகும். விவசாயிகளுடன் உரையாடிய பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில் பறவைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதையும், அவற்றின் நடத்தை முறையைத் தொகுக்கும் இறுதிக்கட்டத்தில் இருப்பதையும் அறிந்ததாக அதிகாரி தெரிவித்துள்ளார். திருப்பூர் தாராபுரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தக்காளி, நெல், மக்காச்சோளம் ஆகியவற்றின் மீது மயில்கள் ஈர்க்கப்படுவதாக விவசாயிகள் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றவர்கள் அவை பயிர்களுக்கு மிகக் குறைந்த சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓராண்டு கால ஆய்வு அடுத்த 4 மாதங்களில் முடிவடைந்து, மயில்கள் பயிர்களைச் சேதப்படுத்தாமல் தடுக்க வனத்துறைக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பறவைகளை விரட்ட வனத்துறை ரிப்லெக்டிவ் டேப்கள் மற்றும் டிகோய்களைப் பயன்படுத்துகிறது. குழுவின் சோதனை அடிப்படையில் விரட்டும் சாதனங்களைப் பயன்படுத்துவது உகந்தது எனக் கூறப்பட்டுள்ளது. மயில்கள் அச்சப்படும் வகையில் தெருநாய் அல்லது குள்ளநரிகள் விவசாய வயலில் விடலாம் என்றும் கூறியுள்ளது.
மேலும் படிக்க