ஐசிஐசிஐ வங்கி நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2 கோடிக்கு மேல் மற்றும் ரூ.5 கோடி வரையிலான டெபாசிட்டுகளுக்கு ஐசிஐசிஐ வங்கி எஃப்டி வட்டி விகித உயர்வு, ரிசர்வ் வங்கி அதன் ரெப்போ விகிதங்களை அதிகரிப்பதன் நேரடி விளைவாக, இது இருக்கிறது.
ஐசிஐசிஐ வங்கி நிலையான வைப்பு வட்டி விகிதம்: சில காலங்களுக்கு நிலையான வைப்பு வட்டி விகிதங்களை உயர்த்தியதன் தொடர்ச்சியாக, தனியார் கடன் வழங்கும் ஐசிஐசிஐ வங்கி அதன் FD விகிதங்களை மீண்டும் திருத்தியுள்ளது. புவிசார் அரசியல் திட்டங்கள் மற்றும் விநியோக பற்றாக்குறை போன்ற காரணிகளுக்கு மத்தியில் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி அல்லது RBI, ரெப்போ விகிதங்களை 0.40 சதவீதம் உயர்த்தி, ஒரு நாளுக்குப் பிறகு இந்த தகவல் வெளிவந்திருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி FD வட்டி விகிதங்கள் 25 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன என்று வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிய FD விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2 கோடிக்கு மேல் மற்றும் ரூ.5 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு, இது பொருந்தும். ஐசிஐசிஐ வங்கி FD வட்டி விகித உயர்வு, RBI அதன் ரெப்போ விகிதங்களை அதிகரிப்பதன் நேரடி விளைவாக வெளிவந்துள்ளது. புதிய ஐசிஐசிஐ வங்கி FD வட்டி விகிதங்களின்படி, 90 நாட்கள் வரையிலான கால அவகாசம் 25 அடிப்படை புள்ளிகள் உயருகிறது. 271 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு, 20 bps FD விகிதம் உயர்வு உள்ளது. இரண்டு ஆண்டுகள் வரையில் ICICI வங்கி FD விகிதங்களில் 15 bps அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காலமும், வட்டி விகிதமும்
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 2.75 சதவீதம்
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 2.75 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.00 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.00 சதவீதம்
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.25 சதவீதம்
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
290 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 4.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
1 வருடம் முதல் 389 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.50 சதவீதம்
390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.50 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 4.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.60 சதவீதம்
18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 4.65 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.65 சதவீதம்
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 4.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.80 சதவீதம்
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 4.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.80 சதவீதம்
ஐசிஐசிஐ வங்கி எஃப்டி வட்டி விகித உயர்வுக்குப் பிறகு பல வங்கிகள் இதைப் பின்பற்ற வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வறிப்பைத் தொடர்ந்து வங்கியில் FD போடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
வந்தே பாரத் இரயில்: சென்னையிலிருந்து 6 புதிய இரயில்கள் இயக்கம்!