கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த விலாக் ஸ்டார் (Vlog Star) வீடியோ எடிட்டர், கிரியேட்டிவ் 3டி லாஞ்சர் உள்ளிட்ட 8 செயலிகளை மால்வேர் மூலம் கட்டுப்படுத்தி பயனர்களின் மெசேஜ்களை ரகசியமாக படித்து வந்துள்ளன. அதனை தற்போது பிளே ஸ்டோரில் இருந்து மறைத்துள்ளனர். நீங்கள் அவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே நீக்கிவிடுங்கள். ஆன்ட்ராய்டு போன்களுக்கு மால்வேர்கள் மற்றும் தகவல்களை திருடும் ட்ரோஜன் வைரஸ்கள் பெரும் ஆபத்தானவைகளாக உள்ளன.
பாதுகாப்பற்ற செயலிகள் (Insecure apps)
மால்வேர் என்பது ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளுக்கு தீங்கு விளைவிக்கும் மென்பொருள். இது நம் அனுமதியில்லாமலேயே ஸ்மார்ட்போனை அணுகும். ட்ரோஜன் வைரசும் அதே போல தான் சட்டத்துக்கு புறம்பான இணையதளங்களை அணுகும் போது அவை தேவையற்ற பைல்களை கொண்டிருக்கும். அது தானாக பதவிறக்கம் அடைந்து நம் தகவல்களை திருடும்.
இவை நாம் அடிக்கடி பார்வையிடும் சமூக ஊடகக் கணக்குகள், வங்கிக் கணக்குகள் போன்றவற்றின் லாகின் தகவல்களை திருடக்கூடும். இந்நிலையில் பிளே ஸ்டோரில் பல லட்சம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள 8 செயலிகள் ஆட்டோலைகாஸ் மால்வேரால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த செயலிகளின் பட்டியல் இதோ.
தேடி நீக்குவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக பெயர்களை ஆங்கிலத்திலேயே கீழே கொடுத்துள்ளோம்.
- Vlog Star Video Editor:- 10 லட்சம் டவுன்லோடுகள்
- Creative 3D Launcher:- 10 லட்சம் டவுன்லோடுகள்
- Wow Beauty Camera:- 100,000 டவுன்லோடுகள்
- Gif Emoji Keyboard:- 100,000 டவுன்லோடுகள்
- Freeglow Camera 1.0.0:- 5,000 டவுன்லோடுகள்
- Coco camera V1.1:- 1,000 டவுன்லோடுகள்
- Funny Camera by KellyTech:- 50,000 டவுன்லோடுகள்
- Razer Keyboard & Theme by rxcheldiolola:- 50,000 டவுன்லோடுகள்
இது பற்றி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எவினா எனும் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் மேக்சிம் இங்ரா கூறியிருப்பதாவது: இந்த செயலிகளை பயனர்கள் நிறுவிய பின் மெசேஜ்களை அணுக அனுமதி கேட்கிறது.
பயனர்கள் அனுமதி அளித்தவுடன் தகவல்களை திருடுகின்றனர். சில நேரங்களில் பயனர்களுக்குத் தெரியாமலேயே பிரீமியம் பதிப்பிற்கு அவர்களை சந்தாதாரர்களாக்கி விடுகின்றனர் என்று கூறினார்.
மேலும் படிக்க
சாலை விபத்துகளை தடுக்க புதிய டெக்னாலஜி அறிமுகம்!
இந்தியாவில் முதன்முதலாக சென்னையில் ராக்கெட் இஞ்சின் ஆலை துவக்கம்!