1. செய்திகள்

இந்தியாவில் முதன்முதலாக சென்னையில் ராக்கெட் இஞ்சின் ஆலை துவக்கம்!

R. Balakrishnan
R. Balakrishnan
India's first rocket engine plant

விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான அனிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos) சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தனது ராக்கெட் இஞ்சின் ஆலையை சென்னையில் தொடங்கியுள்ளது.

ராக்கெட் இஞ்சின் ஆலை (Rocket Engine Plant)

காஸ்மோஸ் நிறுவனம் தொடங்கவுள்ள ஆலையானது, இந்தியாவின் முதல் 3டி பிரிண்டட் (3D Printed) ராக்கெட் இஞ்சின் ஆலையாகும். ராக்கெட் ஃபேக்டரி 1 (Rocket Factory 1) என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆலையை டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் திறந்து வைத்தார். அவருடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் 10,000 சதுர அடியில் இந்த ராக்கெட் இஞ்சின் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் 400mm x 400mm x 400mm 3D பிரிண்டர் உள்ளது. இந்த ஆலையில் ராக்கெட் இஞ்சின் முழுவதுமாக உற்பத்தி செய்யப்படும்.

ஒரு வாரத்துக்கு இரண்டு ராக்கெட் இஞ்சின்களை இந்த ஆலையில் உற்பத்தி செய்ய முடியும் என அக்னிகுல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறுகிறார். இந்த ஆலையில் 30 முதல் 35 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க

உதவாத பிளாஸ்டிக்கில் ஆயில் தயாரிப்பு: அசத்தலான கண்டுபிடிப்பு!

சாலை விபத்துகளை தடுக்க புதிய டெக்னாலஜி அறிமுகம்!

English Summary: Launch of India's first rocket engine plant in Chennai Published on: 15 July 2022, 08:59 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.