ஓய்வு காலத்தைக் கருத்தில்கொண்டு, தினசரி சேமிப்பது, எதிர்காலத்தை ஒளிமயமானதாக, கவுரவம் மிக்கதாக மாற்றும். ஏனெனில் நம்முடைய வயதான காலத்தில் யாரையும் நாம் நம்பியிருக்கத் தேவையில்லை. நம்முடைய உணவுக்கு நம்மிடம் பணம் இருக்கிறது என்றால் அதுவே நம் ஆயுள் நாட்களைக் கூட்டிக்கொடுக்கும்.
நிம்மதியாகவும், தைரியத்தோடும், கவுரவத்தோடும் வாழ வழி செய்யும்.
அவ்வாறு சேமிக்க விரும்புபவராக நீங்கள்? அப்படியானால் இந்த சேமிப்புத் திட்டம் உங்களுக்குக் கைகொடுக்கும். எதிர்கால நிதிப் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்ற நிலையில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், ஓய்வுபெறும் போது உங்களிடம் 34 லட்சம் ரூபாய் இருக்கும்.
National Pension Scheme
இது ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாகும் மத்திய அரசின் திட்டம். ஓய்வூதியத் திட்டத்தில் சரியான காலத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், ஓய்வுபெறும் போது உங்களிடம் 34 லட்சம் ரூபாய் வரை நிதி இருக்கும். இதற்கு அதிக முதலீடு தேவையில்லை, தினமும் 50 ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்தால் போதும்.
-
முதலீடு தொடங்கும் வயது - 25 ஆண்டுகள்
-
NPS இல் மாதாந்திர முதலீடு - ரூ 1,500
-
முதலீட்டு காலம் - 35 ஆண்டுகள்
-
35 ஆண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட மொத்த பணம் - 6.30 லட்சம்
-
முதலீட்டுத் தொகையில் பெறப்பட்ட மொத்த வட்டி - 27.9 லட்சம்
-
ஓய்வூதியத்தின் போது கிடைக்கும் மொத்த வைப்புத்தொகை - 34.19 லட்சம்
-
இதன் கீழ் மொத்த வரி சேமிப்பு - 1.89 லட்சம்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பிறகு, நீங்கள் ஓய்வுபெறும் வயது வந்ததும், உங்கள் முதலீட்டில் 60 சதவீதத்தை திரும்பப் பெறலாம். அதாவது, ஓய்வுபெறும் போது ரூ.20.51 லட்சத்தை எடுக்கலாம். இந்த வகையில், இந்த திட்டம் உங்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும்.
வட்டி
இதற்குப் பிறகு, மீதமுள்ள தொகையை ஆண்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் நிலையான ஓய்வூதியமாகப் பெற பயன்படுத்தலாம். 8 சதவீத வட்டியை அரசு கொடுத்தால், மாதம் 9,000 ஓய்வூதியம் பெறலாம். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் முழுமையாக திரும்பப் பெற முடியாது. இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் 60 சதவீதத் தொகையை மட்டுமே எடுக்க முடியும், மீதமுள்ள 40 சதவீதத்தை நீங்கள் வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...