1. செய்திகள்

புதிய நியோகோவ் வைரஸ்- படுபயங்கர உயிர்க்கொல்லி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
New 'Nyokov' virus - warning as a deadly Virus

ஒமிக்ரான் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், அதைவிடக் கொடிய உயிர்க்கொல்லி வைரஸ் தென் ஆப்ரிக்காவில்  கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே அச்சம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் அரசுகளோ நோய்த்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வழி என்று கலங்கி நிற்கின்றன. 

கடந்த 2019ம் ஆண்டு, இருந்து உலக நாடுகளுக்குப் பரவிய கோவிட் வைரஸ், மனித சமுதாயத்தின் கவனத்தை இன்றுவரைத் தன்வசம் ஈர்த்திருக்கிறது. அச்சத்தின் பிடியிலேயே அனைவரையும் வைத்திருக்கும் இந்த வைரஸ், அவ்வப்போது, புதிது புதிதான உருமாறித் தனது ஆட்டத்தைத் தொடர்கிறது.

ஓயாத ஒமிக்ரான்

டெல்டா அலை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், ஒமிக்ரான் என்ற வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டதாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.

வேகமாகப் பரவினாலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை என்பதால் உலக நாடுகள் பெருமூச்சுவிட்டன. இரண்டு டோஸ், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள் என கருதப்படுவதால், பொது முடக்கம் இல்லாமல் உலக நாடுகள் இயங்கி வருகின்றன.

உருமாறவில்லை

இந்த நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் 3-ல் ஒருவரைக் கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல.

மாறாக திரிபு அல்லது வவ்வாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரஸாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது முதற்கட்ட சோதனைதான்.

முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான் அதன் பாதிப்பு குறித்து தெரியவரும். இருந்தாலும், தற்போதைய நோய் எதிர்ப்புச்சக்தி இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இனி முகக்கவசம் வேண்டாம்- கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து!

80 சதவீத ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு!

English Summary: New 'Nyokov' virus - warning as a deadly Virus

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.